இரவில் பெண்கள் ஆண்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியுமா?

பெரும்பாலும் பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும் தான், இதை யாரும் புரிந்துகொள்வதில்லை, சில சமயம் இதை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழகிக்கும் ஆண்களும் இருக்கின்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2022, 07:38 AM IST
  • பெண்களின் மனதையும், உணர்வுகளையும் முழுவதுமாக புரிந்துகொண்ட ஆண்கள் யாருமே இல்லை.
  • பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும் தான்.
  • சில சமயம் இதை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழகிக்கும் ஆண்களும் இருக்கின்றனர்.
இரவில் பெண்கள் ஆண்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியுமா? title=

பெண்களின் மனது கடலை விட ஆழம், அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆண்கள் பலரும் நினைக்கின்றனர்.  மேலும் ஆண்கள் பலரும் பெண்கள் தங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று தவறாக எதையெதையோ நினைத்துக்கொண்டு இருக்கின்றனர், ஆனால் உண்மையாகவே ஆண்களிடமிருந்து எதை பெண்கள் விரும்புகிறார்கள் என்று இங்கு எந்த ஆணுக்கும் தெரியவில்லை.  பெண்களின் மனதையும், உணர்வுகளையும் முழுவதுமாக புரிந்துகொண்ட ஆண்கள் யாருமே இல்லை, பெண்களை புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது.  பெரும்பாலும் பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும் தான், இதை யாரும் புரிந்துகொள்வதில்லை, சில சமயம் இதை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழகிக்கும் ஆண்களும் இருக்கின்றனர்.  இப்போது உண்மையாகவே ஆண்களிடமிருந்து பெண்கள் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | அடிக்கடி உங்கள் துணையுடன் சண்டை வருகிறதா? சரிசெய்ய டிப்ஸ் இதோ!

1) கட்டுக்கோப்பான உடலமைப்பு கொண்ட மற்றும் வசீகரமான தோற்றத்தை கொண்ட ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்கள் பலரும் நினைக்கின்றனர்.  ஆனால் பெண்களின் உண்மையான விருப்பம் இதுவல்ல, தாங்கள் அழகான தோற்றம் கொண்டிருந்தால் தான் பெண்கள் நம்மை நேசிப்பார்கள் என்று ஆண்கள் ஒரு மாயபிம்பத்தை கொண்டுள்ளனர்.  உண்மையாகவே ஆணிடம் ஒரு பெண் வேண்டுவது அவனது ஒட்டுமொத்த காதலை தான், தங்களை புரிந்துகொண்டு சிரிக்கவைக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புகின்றனர்.

2) ஆண்கள் நினைக்கக்கூடிய முக்கியமான தவறுகளில் ஒன்று இது, அதாவது பொருளாதார ரீதியாக ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள் என்று தவறாக கருதுகின்றனர்.  அது முற்றிலும் தவறு ஆண்களின் பணத்தில் பெண்கள் வாழ நினைக்கவில்லை, இப்போதெல்லாம் பெண்கள் தங்களது சொந்த காலில் நின்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.  ஆண்களை இப்போது யாரும் சார்ந்திருக்க விரும்புவதில்லை.

3) பெண்களின் அறிவுசார்ந்த நடவடிக்கைகளையோ, பேச்சுக்களையோ ஆண்கள் கண்டுகொள்வதில்லை.  தாங்கள் அழகாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்பதை மட்டும் தான் ஆண்கள் நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மையாக பெண்கள் அறிவுசார்ந்த ஊரு உரையாடலை விரும்புகிறார்கள், தோற்றத்தை வைத்து பழகும் ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவதில்லை.

4) எல்லா பெண்களும் உடனேயே குடும்பம் நடத்தி செட்டில் ஆக விரும்புவதில்லை, குழந்தை பெற்றுக்கொண்டு பெண்கள் குடும்பத்திற்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்கள் பலரின் நினைப்பு, இதனை பெண்கள் மறுக்கின்றனர்.  பெரும்பாலான பெண்கள் குடும்பத்தை தொடங்குவதற்கு முன்னர் நேரம், அர்ப்பணிப்பு, சரியான மனநிலை போன்றவற்றை பெற விரும்புகின்றனர்.

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News