வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன்

சுப நிகழ்சிகளில் வீட்டு முன் வாழை மரம் கட்டுவது ஏன் தெரியுமா என்பதன் காரணத்தை இங்கே காண்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2021, 07:07 AM IST
வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன் title=

திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழைமரம் கட்டுவது ஐதீகம். இறைவழிபாடு இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.

முக்கனிகளுல் ஒன்றான வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும். மற்ற இரண்டு கனிகளின் மரங்களை விட வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது. வாழை, தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். 

வாழை மரம் கட்டுவதற்க்கான காரணம்

எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயுவை உள்ளெடுத்து பிராணவாயுவை வெளிவிடுகிறது.  அவை தங்களது உணவுத்தொகுப்பின் போது. 

ALSO READ | Food Donoation: அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்

திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவே இருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஆக்சிஜநின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் நம் முன்னோர்கள். அதிலும் குருத்தோலை தான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும் தான். 

வாழையின் பயன்கள்

  • வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடந்துக்கொண்டே இருக்கிறது. இலை, தண்டு, பூ, காய்,  பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. 
  • வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
  • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
  • அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது.
  • உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. 
  • வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன.

ALSO READ | தானங்களும் அவற்றின் பலன்களும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News