Tirupati: திருப்பதி கோவிலுக்கு 300 மாடுகள் தேவையாம்! காரணம் தெரியுமா?

திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானம், கோவிலின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 03:48 PM IST
  • திருப்பதி கோவிலுக்கு 300 மாடுகள் தேவை!
  • பக்தர்கள் தானமாக மாடுகளை கொடுக்கலாம்
  • தினசரி 30 கிலோ பசும்நெய் கோவிலுக்கு தேவை
Tirupati: திருப்பதி கோவிலுக்கு 300 மாடுகள் தேவையாம்! காரணம் தெரியுமா? title=

திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானம், கோவிலின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருப்பதி திருமலையில் அன்னமய்யா பவனில் தேவஸ்தானத்தின் சிறப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. 300 திருப்பதி கோவிலுக்கு 250 முதல் மாடுகள் தேவை என்று முடிவு செய்யப்பட்டது. இதுவரை 25 நாட்டு மாடுகளை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்திய பிரசாதத்திற்காக நாட்டு மாட்டு பசும்பால் பயன்படுத்தப்படுகிறது. சுவாமிக்கு பிரசாதம் தயாரிக்க தினசரி 30 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காகவே மாடுகள் தேவை என்று கூறப்படுகிறது. பக்தர்கள் மாடுகளையும், நாட்டு மாட்டு நெய்யையும் பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Also Read | திருப்பதி திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

சிறப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைவர் ஜவகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருப்பதி திருமலையில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக பசுமை எரிசக்தி திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சுவாமிக்கு  பயன்படுத்தப்பட்ட மாலைகளில் இருந்து தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகள், ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்ச்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read | Tripathi Balaji: திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News