Covid-19 Vaccine Registration: நாட்டில் முதல் கொரோனா அலையை விட, தற்போது இரண்டாம் அலையில் கொரோனாவின் கோரதாண்டவம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம் இறப்பு எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரொனாவை கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கம், அதற்காக "அனைவருக்கும் தடுப்பூசி" திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று முதல் பதிவு தொடங்கியது. தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது (Aarogya Setu) செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும்போது தயவுசெய்து இதை நினைவில் கொள்க:
தடுப்பூசிக்கு உங்கள் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர் பரிந்துரை செய்த மருத்துவ சான்றிதழை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். தடுப்பூசி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் கோவின் ஹெல்ப்லைன் எண் 1075 ஐ அழைக்கலாம்
ஆரோக்யா சேது ஆப் (Aarogya Setu App) மூலம் பதிவு செய்வது எப்படி?
1. ஆரோக்யா சேது செயலியின் முகப்புப்பக்கத்தில், "கோவின்" (CoWIN) என இருக்கும் இடத்திற்கு செல்லவும்.
2. கோவின் ஐகானின் கீழ், "தடுப்பூசி" (Vaccination) எனக் குறிப்பிட்டு இருப்பதை கிளிக் செய்து "இப்போது பதிவுசெய்க" (Register Now) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு "சரிபார்த்து தொடரவும்" (Proceed to Verify) என்பதைக் கிளிக் செய்க. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு மீண்டும் "சரிபார்த்து தொடரவும்" என்பதைத் கிளிக் செய்யவும்.
ALSO READ | 18+ அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி: எங்கே, எப்படி பதிவு செய்வது?
4. உங்கள் மொபைல் எண் சரிபார்ப்பு முடிந்ததும், நீங்கள் ஒரு புகைப்பட அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும்.
5. வயது, பாலினம், பிறந்த ஆண்டு போன்ற பிற விவரங்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.
6. ஆரோக்யா சேது பயன்பாட்டின் மூலம் அதிகபட்சமாக 4 பேரை நீங்கள் பதிவு செய்யலாம்.
7. உங்கள் மாநில, மாவட்டம், ஊர் பேர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களுக்கான தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுங்கள்.
8. வெற்றிகரமாக பதிவுசெய்ததும், நீங்கள் நிரப்பிய விவரங்களுடன் ஒரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR