AK61: நடிகர் அஜித்தின் புதிய லுக்கை வெளியிட்டார் போனிக்கபூர்

வினோத் - போனிகபூர் கூட்டணியில் மீண்டும் நடிக்கும் அஜித்தின் புதிய லுக் வெளியிடப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2022, 09:09 PM IST
  • அஜித்தின் புதிய லுக் டிரெண்டிங்
  • ஏகே 61 படத்தின் லுக் வெளியீடு
  • படத்தின் தயாரிப்பாளர் போனிக்கபூர் வெளியிட்டார்
AK61: நடிகர் அஜித்தின் புதிய லுக்கை வெளியிட்டார் போனிக்கபூர் title=

3 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. கொரோனா காரணமாக படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிடாமல் இருந்ததால், கால்பந்து மைதானம் முதல் கிரிக்கெட் மைதானம் வரை என வலிமை அப்டேட்டை விடாமல் கேட்டு வந்தனர். ரசிகர்களுக்காக கடந்த டிசம்பர் முதல் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான நிலையில்,  இன்னும் 8 நாட்களில் படமும் ரிலீஸாக உள்ளது. 

மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா..!

ரிலீஸூக்கு முன்பே சுமார் 300 கோடி ரூபாய்க்கு ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்ததை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கும் அஜித்தின் ஏகே 61 படத்தையும் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.  

ஏற்கனவே அவர் ஏகே 61 படத்துக்கான பணிகளை முடித்துவிட்டதால் நேரடியாக சூட்டிங் செல்ல படக்குழு தயாராகி வருகிறது. லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி மார்ச் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஏகே61 சூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கும் படப்பிடிப்பில் சென்னை மௌண்ட் ரோடு ரீ கிரியேசன் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதிய படத்தில் நடிக்கும் அஜித்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனிக்கபூர் வெளியிட்டுள்ள அந்த லுக்கில் செம மாஸாக இருக்கிறார் அஜித்

காதில் மின்னும் கம்மல், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வேற லெவல் வித்தியாசமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அஜித். இந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. 

மேலும் படிக்க | 3 ஹீரோயின்களுடன் விஜய்சேதுபதி ரொமான்ஸ்? விக்ரம் அப்டேட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News