Vadivelu Comeback: 24 ஆம் புலிகேசி படத்தில் நடிப்பதில் இயக்குநர் சங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டிருந்தது. தற்போது அந்த பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்ட நிலையில், நகைச்சுவை மன்னன் நடிகர் வடிவேலு 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் "நாய் சேகர்" (Naai Sekhar) என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளனர். துவக்க விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் வடிவேலு ஜாலியாக, காமெடியாக பேசினார்.
முதலில் மீம்ஸ் கிரியேட்டர்களாகிய என் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி எனப் பேசத் தொடங்கிய வடிவேல் (Actor Vadivelu), இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி புயல்.
கொரோனா என்ற மிகப்பெரிய பிரச்சனை வந்ததால், என்னுடைய பிரச்சனை சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. அந்த மாதிரி நேரத்தில் என்னுடைய காமெடி மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.
எனக்கு மறுவாழ்வு கொடுத்த லைகா சுபாஷ்கரன் மக்கள் மத்தியில் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.
ALSO READ | Vadivelu: இம்சை அரசனின் இம்சைகள் தீர்ந்தன, இனி புயலாய் நடிப்பார் வைகைப்புயல் வடிவேலு
இன்றிலிருந்து என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு தான் இந்த உசுரு என்னைவிட்டு போகனும். இதுதான் என்னுடைய லட்சியம். திருப்பி வாழ்வு கிடைத்ததுக்கு கடவுளுக்கும் மக்களுக்கும் நன்றி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை என்று பார்த்தானோ, அன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கிறது. இனியும் நல்லதாக நடக்கும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். சீக்கிரமா படத்தில் நடிங்க வடிவேலு என்று சொன்னார் தமிழ்நாடு முதல்வர்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், எனக்கு End-ஏ கிடையாது. நான் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடி. எப்படியோ தப்பிச்சுட்டேன்.
சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய். 100 கோடி ரூபாய் இழப்பு என்றெல்லாம் சொல்வார்கள். இனி சங்கர் ஏரியா பக்கமே போக மாட்டேன். வரலாறு படம் பண்ணும் ஐடியே ஏதும் இல்லை. இனியும் பண்ண மாட்டேன்.
ALSO READ | மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்; தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்- நடிகர் வடிவேலு
மக்களுக்கு இப்போதைய தேவை நடிப்பது மட்டும் தான். நாய் சேகர் டைட்டில் தேவைப்பட்டது. நாய்க்கும் வடிவேலுவுக்கும் ஃப்ரெண்ட்ஷிப் பற்றின கதை தான் நாய் சேகர் படம்.
என்னை படத்தில் நடிக்க வைக்க நிறைய அழைப்புகள் வருகிறது. தம்பி சிவகார்த்திகேயன், லாரன்ஸ் போன்றவர்களும் அழைத்தார்கள். இரண்டு படம் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் வேறு கதாநாயகர்கள் படத்தில் நடிக்க இருக்கிறேன். அதேபோல நிறைய வெப்சீரிஸ்க்கு கூப்பிட்டாங்க. இன்னும் கமிட் ஆகல. இப்ப பெரிய திரைக்கு வந்தாச்சு. வெப் சீரிஸ் பின்னாடி பார்ப்போம்.
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்' என இடையில் பாடலும் பாடினார்.
உதயநிதி ஸ்டாலின் உடன் நிச்சயம் நடிப்பேன். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி உள்ளது. எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
நண்பன் விவேக்கிற்கு அஞ்சலி. என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பை கடவுள் எனக்கு தந்திருக்கிறார்.
ALSO READ | பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம் - நடிகர் வடிவேலு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR