சொந்த வாழ்க்கை குறித்து பேசினால்?... ராஷ்மிகா மந்தனா விளக்கம்

சொந்த வாழ்க்கை குறித்து பேசினால் அதனை கண்டுகொள்ளமாட்டேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 10, 2022, 09:17 AM IST
  • ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை ஆவார்
  • வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்
  • படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது
 சொந்த வாழ்க்கை குறித்து பேசினால்?... ராஷ்மிகா மந்தனா விளக்கம் title=

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் ராஷ்மிகா சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

மேலும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், " காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பார்க்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர், "வாய்க்கு வந்தபடி பேசுகிறவர்கள் பேசட்டும். ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக்கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டுகொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Baba Re Release: படுதோல்வியடைந்த பாபா ரீ ரிலீஸ் ஏன்... நிறைவேறுமா ரஜினியின் ஆசை?

மேலும் படிக்க | Game on..வெளியான உடனே சாதனைகளை அடித்து நொறுக்கிய அஜித்தின் "சில்லா சில்லா’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News