Game on..வெளியான உடனே சாதனைகளை அடித்து நொறுக்கிய அஜித்தின் "சில்லா சில்லா’

Thunivu First Single: தாரை தப்பட்டை கிழிய அஜித்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி சோஷியல் மீடியா டிரெண்ங்கில் இடம்பிடித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 9, 2022, 07:58 PM IST
Game on..வெளியான உடனே சாதனைகளை அடித்து நொறுக்கிய அஜித்தின் "சில்லா சில்லா’ title=

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வாரிசு படத்துக்கு நேரடி போட்டியாக வரும் இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 6.30 மணிக்கு தாரை தப்பட்டை கிழிய மாஸாக வெளியாகியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருக்கும் ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸில் மைனா நந்தினியின் சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன தனலட்சுமி!

இருக்கிறது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ் .... போனதெல்லாம் போகட்டும் தேவையில்ல டியர்ஸ்... புடிச்சதை செய்யறது என்னைக்குமே மாஸ், நமக்கு முக்கியம் இன்னர் பீஸ், என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கிருக்கே’ உள்ளிட்ட வரிகள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. அனிரூத்தின் குரலில் தெறிக்கும் வார்த்தைகளும், தர லோக்கலில் மக்களுக்கு புரியம்படி நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கொண்டு பாடல் எழுதியிருக்கும் பாடலாசிரியர் வைசாக்கிற்கும் ரசிகர்கள் இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தியேட்டருக்கு ஏற்ற சரியான பாடலாக இருப்பதாக தெரிவித்துள்ள ரசிகர்கள், பொங்கல் வெளியீடாக வரும் துணிவு நிச்சயம் தாறுமாறாக இருக்கும் என டிவிட்டரில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். வாரிசு படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல், மாஸ் ஹிட் அடித்த நிலையில் துணிவு படத்தில் இருந்து இப்போது வெளியாகியிருக்கும் சில்லா சில்லா பாடலும் அதே ஹிட்டை ரீச் செய்யும் ரிவ்யூக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வாரிசுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் துணிவு இருக்கும் என கணித்துள்ள ரசிகர்கள், சில்லா சில்லா பாடலுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | 56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News