இதுதான் நடிகை ஆல்யாவின் புதிய சீரியல்; அதுவும் இந்த தொலைக்காட்சியில்

முன்னதாக ராஜா ராணி இரண்டாவது தொடரில் கமிட்டாகி இருந்த ஆல்யா கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 19, 2022, 10:32 AM IST
  • புது சீரியலில் ஆல்யா மானசா.
  • வெளியான புதிய அப்டேட்.
  • புதிய தொடரில் பிரபல தொலைக்காட்சி.
இதுதான் நடிகை ஆல்யாவின் புதிய சீரியல்; அதுவும் இந்த தொலைக்காட்சியில் title=

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறினார்கள். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உடல் எடை கூடிய அவர், சட்டென எடையை குறைத்து மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கமிட் ஆனார். அடுத்த சில மாதங்களில் இரண்டாவதாக கர்ப்பமான ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். 

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி தொடங்கி பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆல்யா ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார்.

மேலும் படிக்க | சன்னி லியோனுக்கு பிடித்த தமிழ் நடிகர் இவரா? ஜிபி முத்துவுக்கு கிடைத்த பம்பர் பரிசு

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | அதிகாரத்தில் இருப்பதால் இவ்வளவு அலட்சியமா உதயநிதி?...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

இதற்கிடையில் தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பே தான் புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்தாரே தவிர எந்த தொலைக்காட்சி என்ன தொடர் என கூறவில்லை. தற்போது புதிய சீரியலுக்கான படப்பிடிப்பை ஆல்யா மானசா தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது புதிய சீரியலின் படபிடிப்பை ஆரம்பித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய தொடரில் தான் நடிக்கிறாராம். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் படிக்க | வாரிசு வரவில்லையென்றால் அவ்வளவுதான் - விஜய்க்காக களமிறங்கிய சீமான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News