அண்ணா சீரியல்: காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான்

காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2024, 01:23 PM IST
அண்ணா சீரியல்: காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனிக்கு நடந்த விஷயத்தால் பொண்ணு ராசி இல்லாதவள் என்று பேச தொடங்க தாய் மாமா இந்த கல்யாணம் நடக்காது என்று கவிதாவை அழைத்து கொண்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, முத்துபாண்டிக்கும் கவிதாவின் தாய் மாமாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்ற சண்முகம் இடையில் புகுந்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், கவிதா என்னுடைய தங்கச்சி. நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி டீம் சந்தோசப்படுகின்றனர். 

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியை கூப்பிட்டு தாலி கட்டும் நேரத்தில் சனியன் குண்டிலியம் பொடியை அக்னி குண்டத்தில் போடுவான், புகையாக கிளம்பும். இந்த நேரத்தில் ரத்னா கழுத்தில் தாலியை கட்டிடு என்று பிளானை சொல்ல இதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விடுகிறார். 

மேலும் படிக்க | ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…

உடனே இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்கிறேன் என்று அவர் வெளியே வர சௌந்தரபாண்டி ஆட்கள் அவரை பிடித்து அடித்து சரக்கு ஊற்றி படுக்க வைத்து விடுகின்றனர். நைட் நேரத்தில் சண்முகம் தூக்கம் வராமல் உலாத்தி கொண்டிருக்க பரணி என்னாச்சு என்று கேட்கிறாள். ஷண்முகம் எனக்கு என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News