சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

Swasika Prem Jacob Marriage: ‘சாட்டை’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்த ஸ்வாசிகா, தற்போது சீரியல் நடிகர் ஒருவரை கரம் பிடித்து இருக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Jan 27, 2024, 12:46 PM IST
  • சாட்டை படத்தில் நடித்தவர், ஸ்வாசிகா
  • சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப்பை கரம் பிடித்தார்
  • திருமணம் 24ஆம் தேதி நடந்துள்ளது
சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து.. title=

Sattai Actress Sawika Married Serial Actor Prem Jacob: தமிழ் திரையுலகில் வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர், ஸ்வாசிகா. இவர், ஒரு பிரபல தமிழ் சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். 

சாட்டை பட நடிகை..

மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகில் பிரவேசித்த நடிகைகளுள் ஒருவர், ஸ்வாசிகா. இவர் முதன் முதலில் நடித்தது, ‘வைகை’ என்ற தமிழ் படத்தில்தான். அடுத்து தொடர்ந்து கோரிப்பாளையும், மைதானம் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் துணை நடிகையாக இருந்த இவருக்கு பல்வேறு மலையாள படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து. 

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில், 2011ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தில் தயா எனும் ஆசிரியருக்கு மனைவியாக நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்ட இவர், 2014ஆம் ஆண்டு ‘அப்புச்சி கிராமம்’ எனும் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் மலையாள திரையுலகின் பக்கம் திரும்பினார். அங்கு சில ஆண்டுகள் சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | என் அப்பாவை ‘சங்கி’ என்று சொல்லும்போது மனவேதனையும், கோபமும் வரும்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சீரியல் நடிகரை கரம் பிடித்தார்..

பிரபல தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர், ‘நீ நான் காதல்’. இத்தொடரில், பணக்கார கதாநாயகனின் கதாப்பாத்திரத்தின் பெயர், ராகவ். இந்த கேரக்டரில், பிரேம் ஜேக்கப் என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர், இவர் சில மலையாள தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்திருக்கிறார். சமீப காலங்களில் பல இளைஞிகளின் க்ரஷ் லிஸ்டில் இடம் பிடித்திருந்த இவர், திடீரென தனது திருமண செய்தியை அறிவித்து அவரது ரசிகைகளுக்கு அதிர்ச்சி அளித்தார். 

பிரேமும்-ஸ்வாசிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாள் காதலர்களாக இருந்த இவர்கள், தற்போது திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் திருமணம், கடந்த 24ஆம் தேதி நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். மலையாளம் மற்றும் தமிழ் வெள்ளித்திரை-சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்த புது ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
திருமண புகைப்படங்கள்..

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swaswika (@swasikavj)

ஸ்வாசிகா மற்றும் பிரேம் ஜேக்கப்பின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த திருமண நிகழ்வில் நடிகர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்த வீடியோவும் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News