இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசன் வரிகளை பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்

இந்தி மொழி தொடர்பான சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில் பாரதிதாசன் வரிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 9, 2022, 09:11 AM IST
  • இந்தி மொழி திணிப்பு எதிராக ஏ.ஆர்.ரகுமான்
  • இன்ஸ்டாகிராமில் கருத்தை பதிவிட்டார்
  • பாரதிதாசன் வரிகளில் எதிர்ப்பை பதிவு செய்தார்
இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசன் வரிகளை பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்  title=

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்த அவர், அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க |இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிறதா இந்தி? அமித் ஷா சூசகம்

அதற்கு பொதுமொழியாக இந்தி மட்டுமே இருக்க முடியும் எனக் கூறியுள்ள அவர், நாடு முழுவதும் இந்தி மொழித் தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை அதிகப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் அலுவல் மொழிக் கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்துகளுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அமித்ஷாவின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் நினைக்கிறாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். மேலும், ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது, ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. 

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்றும் தமிழக முதலமைச்சர் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதேபோல் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தி மொழி சர்ச்சை எழுந்திருக்கும் இந்த நேரத்தில் மொழி குறித்து ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டது இந்தி மொழி திணிப்புக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்திருப்பதாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க |பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் 38 கோரிக்கைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News