பாக்கியலட்சுமி தொடர் நடிகர்களில் இவருக்குதான் அதிக சம்பளமா..! முழு விவரம் இதோ..!

சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா..?   

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2023, 09:25 AM IST
  • பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், பாக்கியலட்சுமி.
  • இதில், ரேஷ்மா, சுரேஷ், சுசித்ரா என பலர் நடிக்கின்றனர்.
  • இவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் நடிகர்களில் இவருக்குதான் அதிக சம்பளமா..! முழு விவரம் இதோ..! title=

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான தொடராக விளங்குவது, பாகியலட்சுமி. இந்த தொடர், டி.ஆர்.பியில் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. முதல் எபிசோடில் இருந்து தற்போதைய எபிசோட் வரை இதன் ரசிகர்கள் அதிகமானார்களே தவிர குறையவில்லை. இதில் நடித்து வருபவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

கதை என்ன..?

வீட்டில் பார்த்து வைத்த பெண்ணான பாகியலட்சுமியை திருமணம் செய்து கொண்ட கோபி, மூன்று பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு தன் பழைய தோழியான ராதிகா மிது காதல் வயப்படுகிறான். அவளை திருமணமும் செய்து கொள்கிறான். ஆரம்பத்தில் கணவன் மாறிவிட்டான் என்பதை ஏற்க மறுக்கும் பாக்கியா, பின்பு சுயமாக உழைத்து, தன் சொந்த காலில் நிற்கிறாள். ஆனாலும் அவளது முன்னாள் கனவன் மூலமாகவும் அவனது புதிய குடும்பம் மூலமாகவும் அவளுக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதை தினம் தினம் சந்தித்து வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் பாக்கியா. 

மேலும் படிக்க | பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்..! போலீசார் விசாரணை

புது எண்ட்ரி..

பிரபல சினிமா நடிகர் ரஞ்சித், பாகியலட்சுமி தொடரில் சில நாட்களுக்கு முன்பு புது எண்ட்ரியாக நுழைந்தார். இவர், 90ஸ்களில் பல படங்களில் வில்லனாகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இவர்தான் இனிபாகியலட்சுமிக்கு ஜோடி என பேசப்படுகிறது. இவரை சீரியலில் காண்பித்ததை தொடர்ந்து, கோபி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ், அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சம்பள விவரம்:

படத்தில் நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி அவர்களுக்கு சம்பளம் வழங்கும் முறை சின்னத்திரையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், சினிமா நடிகர்களை போல சீரியல் நடிகர்கள் மொத்தமாக தொகை வழங்கப்படுவதில்லை. அவர்கள் நாட்கள் கணக்கிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி,பாகியலட்சுமி தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதையும், யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பதையும் பார்ப்போம். 

பாகியலட்சுமியின் மகளான இனியா எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நேஹாவிற்கு ஒரு நாளைக்கு 8,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பாக்கியாவின் மருமகளாக நடிக்கும் ஜெனி திவ்ய கனேஷிற்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறதாம். பாகியலட்சுமியின் பிள்ளைகள் செழியன் மற்றும் விசால் கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு தலா 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இவருக்குதான் அதிக சம்பளமா..?

பாகியலட்சுமி தொடரின் முக்கிய கதப்பாத்திரமும் நாயகியுமான சுசித்ராவிற்கு ஒரு எபிசோடிற்கு 15,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இவருக்குதான்  இருப்பதிலேயே சம்பளம் அதிகம். கோபி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சதீஷிற்கும், அவருக்கு ஜோடியாக ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலெட்டி ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

இன்று நடக்கவிருப்பது என்ன..?

கோபிக்கு ஒரே மாதத்தில் பதினெட்டு லட்ச ரூபாய்  கொடுப்பதாக பாக்யா சவால் விட்டிருந்தாள். அந்த பணம் கொடுப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் மிச்சம் இருக்கிறது. அவள் சமீபத்தில் பாண்டிச்சேரி கல்யாணத்தில் சமைத்த பணம் கைக்கு கிடைக்கிறது. ஆனால், அதில் வெறும் எட்டு லட்சம் தான் இருக்கிறது. மிச்ச பத்து லட்சத்திற்கு எண்ண செய்ய போகிறோம் என பாக்யலக்ஷமி குழம்பி போகிறாள்.  அதே நேரம், அங்கு வரும் கோபி, பாக்யாவிடம், ‘பணமெல்லாம் ரெடியா?’ என கேட்டு வம்புக்கு வருகிறான். இதைக்கேட்டு டென்ஷனாகும் கோபியின் அப்பா, ‘ரெண்டு நாள்ல என் மருமகள் உனக்கு கொடுக்க பணத்த மூஞ்சில விட்டெறிவா பார்..’ என்கிறார்.  

இந்த வார எபிசோடிற்கான ப்ரமோவில், கோபி மீண்டும் பணம் கேட்டு வரும் காட்சியும், பணம் இல்லாமல் இருந்த பாக்யா பூஜை அறைக்கு சென்று கட்டுக்கட்டான பணத்தை எடுத்து வந்து கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. பாக்கியாவிற்கு பணம் எப்படி கிடைத்தது? அவ்வளவு பணத்தை பாக்கிய எப்படி ரெடி செய்தால்? போன்ற கேள்விகளுடன் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | தனுஷுக்கு போட்டியாகும் சிவகார்த்திகேயன்..? ‘மாவீரன்’ பட நாயகனின் அடுத்த மூவ் இதுதான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News