போனி கபூர் தயாரிப்பில் ரஜினி... சந்திப்பின் பின்னணி என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போனி கபூர் சந்தித்ததை அடுத்து தகவல் ஒன்று பரவிவருகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 25, 2022, 06:29 PM IST
  • ரஜினியை இன்று சந்தித்தார் தயாரிப்பாளர் போனிகபூர்
  • அதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருந்தார்
  • போனி தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்
 போனி கபூர் தயாரிப்பில் ரஜினி... சந்திப்பின் பின்னணி என்ன? title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?

இதற்கிடையே பீஸ்ட் படம் கொடுத்த அடியால் ரஜினியின் 169ஆவது படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார் எனவும் கோலிவுட்டில் பரவ ஆரம்பித்தது. ஆனால் ரஜினியின் படத்தை நெல்சனே இயக்கவுள்ளார். விரைவில் ஷூட்டிங்கும் ஆரம்பிக்க இருக்கிறது.

 

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று ரஜினியின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “உங்களை சந்தித்து பேசியதில் மிகவும் சந்தோஷம் போனி கபூர். பழைய நினைவுகள், பப்பி அக்காவை நினைவுகூர்ந்தது, வேலை பற்றி பேசியது நன்றாக இருந்தது ” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | 'குக் வித் கோமாளி 3' டைட்டில் வின்னருக்கு கிடைத்த பரிசு தொகை இவ்வளவா?

போனிகபூர் ரஜினியை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அப்போது போனி அதை மறுத்திருந்தார். தற்போது ரஜினியை திடீரென சந்தித்திருப்பதால் ஒருவேளை ரஜினியை வைத்து போனி கபூர் படம் தயாரிப்பதற்கான முதல்கட்ட வேலையை தொடங்கிவிட்டாரோ என்றே பலரும் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | தேசிய விருது வென்ற கையோடு சூரரைப் போற்று பாடல்களை முடித்த ஜிவி பிரகாஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News