20 வருடங்கள் நிறைவு... தனுஷ் நெகிழ்ச்சி

திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 09:49 PM IST
  • 20 வருடங்களை நிறைவு செய்த தனுஷ்
  • தனுஷ் அறிக்கை
  • நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தனுஷ்
20 வருடங்கள் நிறைவு... தனுஷ் நெகிழ்ச்சி title=

துள்ளுவதோ இளமை படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தனுஷ். அவருடைய ஆரம்ப காலத்தில் தனுஷின் உருவத்தை வைத்து பலரும் அவரை கிண்டல் செய்தனர். 

இருப்பினும் தன்னம்பிக்கையை விடாத தனுஷ் தனது உழைப்பாலும், நடிப்பாலும் தற்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். மேலும் தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

Dhanush

இந்நிலையில் அவர் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம். திரையுலகில் என் பயணம் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் வேகமாக ஓடுகிறது. நான் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கத் தொடங்கும்போது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார்.

மேலும் படிக்க | இளையராஜா பிறந்தநாளில் கோவையில் இருக்கிறது விருந்து

என்னுடைய ரசிகர்களின் அளவுகடந்த அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. நீங்கள்தான் என் பலம், ஐ லவ் யூ ஆல்.என் மீது அன்பு செலுத்தும் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள். 

Dhanush

எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய அண்ணன் - குரு செல்வராகவன், எனக்குள் இருக்கும் நடிகனை வெளியில் கொண்டுவந்த என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றிகள். 

மேலும் படிக்க | இந்தியில் நடித்து நேரத்தை வீணாக்க மாட்டேன் - மகேஷ் பாபு அதிரடி

இறுதியாக என் தாய்க்கு நன்றி. அவருடைய அன்றாட பிரார்த்தனைகள்தான் என்னை பாதுகாத்து இவ்வளவு தூரம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. என் அம்மா இல்லாமல் நான் ஒன்றுமில்லை. இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். எண்ணம் போல் வாழ்க்கை அன்பை பரப்புங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகி9ன்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News