அசத்தும் அசுரன்: வாங்கிய விருதுக்கு உருகி உருகி நன்றி கூறிய தனுஷ்

'அசுரன்' படத்தில் தனுஷின் அபார நடிப்பிற்காக நடிகர் தனுஷிற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ’ஆடுகளம்’ படத்திற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2021, 04:31 PM IST
  • அசுரன் படத்தில் அபார நடிப்பிற்காக தனுஷிற்கு தேசிய விருது.
  • தனது ட்விட்டர் செய்தி மூலம் பலருக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்.
  • ரசிகர்களின் அன்புதான் என்னை இயக்குகிறது-தனுஷ்.
அசத்தும் அசுரன்: வாங்கிய விருதுக்கு உருகி உருகி நன்றி கூறிய தனுஷ் title=

தனுஷ் பல ஆண்டுகளாக தன் நடிப்புத் திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் ஒரு அற்புதமான நடிகராவார். அசத்தலான பல வேடங்களில் நடித்துள்ள தனுஷ், பல சவால் மிகுந்த கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக அசத்தியுள்ளார். 

தனுஷ் 2019 ஆம் ஆண்டின் அதிரடி ஆக்‌ஷன் படமான 'அசுரன்' படத்தில் ஒரு வயதான பொறுப்பான தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் அவரது அபார நடிப்பிற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ் (Dhanush), தனது ட்விட்டர் அகௌண்டில், சிவசாமி கதாபாத்திரத்தை தனக்கு வழங்கியதற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்தார். 

பலருக்கு தனது ட்விட்டர் செய்தி மூலம் தனுஷ் நன்றி கூறினார். தன்னால் தனது வாழ்வில் இந்த நிலைக்கு வர முடியும் என தான் எண்ணிக்கூட பார்த்ததில்லை என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: விருதுகளை அள்ளிய “அசுரன்” ; நடிகர் தனுஷிற்கு தேசிய விருது

தனுஷ் தனது தந்தை மற்றும் தாய்க்கும், தனது குருவான அண்ணன் செல்வராகவனுக்கும் ட்விட்டர் செய்தி மூலம் நன்றி கூறினார். 'அசுரன்' படத்தின் முக்கிய கதாபாத்திரமான 'சிவசாமி'-யை தனக்கு அளித்ததற்காக தனுஷ் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்தார். இயக்குனர் வெற்றிமாறனுடனான (Vetrimaran) தனது உறவையும் பிணைப்பையும் தனுஷ் பகிர்ந்து கொண்டார். மேலும், ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் கைகோர்த்து பணிபுரிய ஆவலுடன் காத்திருப்பதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

'அசுரன்' (Asuran) படக்குழுவிற்கு அவர்களது ஆதரவுக்காக நன்றி தெரிவித்த தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறப்புக் குறிப்பையும் வழங்கினார். இறுதியாக, தான் தனது தூணாகக் கருதும் தனது ரசிகர்களுக்கு, அவர்கள் காட்டும் அளவிட முடியாத அன்பிற்கு நன்றி தெரிவித்தார். அந்த அன்புதான் தன்னை இயக்குகிறது என்றார் அசுரன் தனுஷ். ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற தனது புகழ்பெற்ற வரிகளுடன் தனுஷ் தன்னுடைய செய்தியை நிறைவு செய்தார்.

'அசுரன்' படத்தில் தனுஷின் அபார நடிப்பிற்காக நடிகர் தனுஷிற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ’ஆடுகளம்’ படத்திற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 67th National Film Awards List: 67வது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியலின் முழு விவரங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News