தனுஷின் படத்தின் பெயர் மாற்றமா?

Last Updated : Apr 3, 2017, 11:35 AM IST
தனுஷின் படத்தின் பெயர் மாற்றமா? title=

தனுஷின் இயக்கத்தில் வெளிவர உள்ள பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்தக்கட்டமாக இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, பவர் பாண்டி என பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி டிரைலர் வெளிவந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் காதலுக்காகவே ஒரு டிரைலரை உருவாக்கி அதனை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரபேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் வரி விலக்கு உள்ளிட்ட பல காரணங்களுக்காக ப.பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Trending News