Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..

Bloody Beggar Movie Promo : கவின் நடிக்கும் புது படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : May 3, 2024, 06:42 PM IST
  • பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்
  • நெல்சன் திலீப்குமார் தயாரிக்கிறார்
  • படத்தின் பெயர் ப்ளடி பெக்கர்
Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ.. title=

Bloody Beggar Movie Promo : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் புது படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

காமெடியாக வெளியாகியிருக்கும் இந்த ப்ரமோவில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இந்த ப்ரமோவில் வந்துள்ளனர். 

இந்த ப்ரமோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. 

புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன்:

தமிழ் திரையுலகில், டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப் குமார். படங்களை இயக்கி வந்த இவர், தற்போது ஃபிலமெண்ட் பிக்சர்ஸ் (Filament Pictures) எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியிருக்கிறது, ப்ளடி பெக்கர் திரைப்படம். இந்த படத்தை சிவபாலன் முத்துகுமார் என்பவர் இயக்குகிறார். இது, இவரது முதல் படமாகும். 

கவினை பிச்சைக்காரனாக்கிய இயக்குநர்!

நடிகர் கவின், இதுவரை தான் நடித்த படங்களிலும் சரி சீரியல்களிலும் சரி ஒரு அழகான இளைஞனாக, சாக்லேட் பாயாக நடித்திருந்தார். ஆனால் முதன்முறையாக அவரை ஒரு பிச்சைக்காரராக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சிவபாலன். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் கூட, நெல்சன் இதை பேசியிருக்கிறார். “நமக்கெல்லாம் கவினை பார்த்தால் அழகான ஹீரோ போல தோன்றுகிறது. ஆனால், அந்த இயக்குநருக்கு மட்டும் பிச்சைக்காரன் போல தோன்றியிருக்கிறது பாரேன்..” என்று பேசியிருக்கிறார். 

தன் படங்கள், மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்பை தனது பாணியில் ஜாலியாக வெளியிடும் நெல்சன் இப்போது தனது ப்ரொடக்‌ஷனில் உருவாகும் படத்தின் அறிவிப்பையும் அதே போல அறிவித்திருக்கிறார். இது, தற்போது ரசிகர்கர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் படிக்க | அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

ஸ்டார் படத்தில் கவின்!

நடிகர் கவின் ஹீரோவாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம், ஸ்டார். இந்த படத்தை இயக்குநர் இலன் இயக்குகிறார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கி பிரபலமான இவர், தற்போது கவினை வைத்து ஸ்டார் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஹரிஷ் கல்யாண்தான். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலக, தற்போது கவின் அந்த வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். அது மட்டுமன்றி இந்த படத்தில் வரும் மெலடி பாடலுக்காக அவர் பெண் வேடமிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் கூட வைரலானது. 

சீரியல் நாயகன் டு சினிமா நாயகன்:

சில வருடங்களுக்கு முன்னர் சீரியல்களில் நடித்து வந்த கவின், அப்படியே படங்களிலும் துணை கதாப்பாத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு, தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாகவும் இருக்கிறார். இவருக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய மேடையை அமைத்து கொடுத்தாலும், இத்தனை ரசிகர்களின் மனங்களிலும் இவர் இன்னும் இடம் பெற்றிருக்க இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் மிகவும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இவர் நடித்த லிஃப்ட் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற, அடுத்து நடித்த டாடா திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து, இவரது கதை தேர்வின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் வந்தது. மாறி மாறி இவர் ஸ்டார் திரைப்படத்திற்கு ப்ரொமோஷன் செய்து வருவதால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். 

மேலும் படிக்க | Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News