சசிகுமார், சமுத்திரகனி வரிசையில்-அமீர்க்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்னொரு இயக்குநர்!

நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனியை தொடர்ந்து இயக்குனர் அமீர்க்கு ஆதரவாக , இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும் அறிக்கை.  

Written by - Yuvashree | Last Updated : Dec 15, 2023, 04:08 PM IST
  • பருத்தி வீரன் பட விவகாரம் பூகம்பமாக வெடித்தது.
  • அமீருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர்.
  • இன்னொரு இயக்குநரும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
சசிகுமார், சமுத்திரகனி வரிசையில்-அமீர்க்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்னொரு இயக்குநர்! title=

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே நடந்த விவகாரம் தமிழ் திரையுலகினரையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பல இயக்குநர்கள் ஒன்று திரண்டனர். 

அமீர்-ஞானவேல் ராஜா விவகாரம்..

இயக்குநர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா சில நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் தகாத வாரத்தைகளில் பேசினார். பருத்திவீரன் படத்தின் கணக்கு விஷயத்தில் தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா குற்றம் சாட்டினார். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தை எடுக்க அமீர்தான் பாதி பணத்தை போட்டு எடுத்ததாக கூறப்படுகிறது. ஞானவேல் ராஜா கொடுத்திருந்த பேட்டியில், அமீர் தன் பணத்தை திருடி விட்டதாக கூறினார். 

ஞானவேல் ராஜா இவ்வாறு பேசிய விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதையடுத்து, இன்னொரு இயக்குநரும் ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

SR Prabhakaran

எஸ்.ஆர்.பிரபாகரன்:

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி புகழ் பெற்றவர், எஸ்.ஆர்.பிரபாகரன். இவர், அமீர் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஓயாது அலைகள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி....

அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக - இந்த கடிதம்

இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது - நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி - அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால், அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல - முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள் - எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட படைப்பாளி, என்று உலகறிய செய்திருக்கிறது.

மேலும் படிக்க | சென்னையில் விமர்சையாக நடைபெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்!

‘’மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன்‘’ - இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை - இன்னொரு பாரதிராஜா - வாக ஏற்றுக்கொள்ள எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி 

உண்மை என்று ஏதோதோ பேசினீர்களே

இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிகட்டா? ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி  100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே - அதை பற்றி பேசுவோமா ? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு - பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு - எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ - அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை - அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து - இந்த பிரச்சனையை - நீங்கள் முடித்து கொள்வதுதான்” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயனின் படம்! என்ன படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News