ஓடிடியில் வெளியாகும் படங்களை டவுன்லோட் செய்வது எப்படி?

OTT Download: நாம் ஆன்லைனில் ஓடிடியில் பார்க்கும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்து பிறகு பார்த்து கொள்ள முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 14, 2023, 09:29 AM IST
  • ஓடிடியில் ஆப்லைனியில் வீடியோக்களை பார்க்க முடியும்.
  • டேட்டா அதிகமாக செலவாவதை தடுக்கிறது.
  • வெப் தொடர்களையும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
ஓடிடியில் வெளியாகும் படங்களை டவுன்லோட் செய்வது எப்படி? title=

Amazon Prime, Hotstar, Netflix போன்ற பிரபல ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சாதனத்தில் தங்களுக்கு பிடித்த படங்கள் மற்றும் வெப் தொடர்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றன. இதனால் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களை இணைய சேவை இல்லாத இடங்களில் அல்லது பயணங்களின் போது பார்த்து மகிழலாம்.  திரைப்படங்கள் மற்றும் தொடர்களை பதிவிறக்கும் செய்து பயனர்கள் உயர்தரத்தில் பார்த்து கொள்ளலாம். அதுவே, இணையத்தில் பார்க்கும் போது ​​இணைய வேகம் ஏற்ற இறக்கமாக இருக்கும், இது வீடியோவின் தரத்தை பாதிக்கலாம்.  இந்த பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி மின்வெட்டு சமயங்களில் அல்லது பயணத்தின் போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.  பெரும்பாலும் நாம் ஸ்மார்ட்போன்களில் ஆப்லைனில் படங்களை பதிவிறக்கம் செய்து வைத்து இருப்போம்.  நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் தொடரையோ அல்லது நீண்ட நாட்களாக பார்க்க விரும்பும் திரைப்படத்தையோ பதிவிறக்கம் செய்வது நல்லது.

மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஓடிடி தளங்களில் படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதால் கிடைக்கும் மற்றொரு நம்மை என்னவென்றால் டேட்டா வீணாவது தவிர்க்கப்படுகிறது.  இணையத்தில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கும் போது அதிக டேட்டா தேவைப்படும். மேலும், நீங்கள் மற்ற நாட்டிற்குச் செல்லும் போது, நீங்கள் படங்களை ஆப்லைனில் பதிவிறக்கம் செய்து வைத்து இருந்தால், அந்த குறிப்பிட்ட நாடுகளில் அந்த படங்கள் அல்லது வெப் தொடர்கள் பார்க்க அனுமதி இல்லை என்றாலும் நீங்கள் பார்த்து கொள்ள முடியும்.  

நெட்ஃபிளிக்ஸ், அமேசானில் படங்களைப் பதிவிறக்குவது எப்படி?

நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டாரில் படங்களை டவுன்லோட் செய்வது மிகவும் எளிது. இருப்பினும், நீங்கள் டவுன்லோட் செய்யும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை அந்த ஆப்பில் மட்டுமே பார்க்க முடியும்.  மாறாக உங்கள் மொபைலில் அல்லது வேறு தளத்தில் பார்க்க முடியாது.  இதனை பென் டிரைவ் அல்லது மற்ற சாதனங்களுக்கு மாற்றி கொள்ள முடியாது. பதிவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களை 30 நாட்கள் வரையில் பார்த்து கொள்ளலாம்.

  • படங்களை ஆப்லைனில் பார்க்க உங்கள் ஓடிடி தளத்தை திறந்து கொள்ளவும்.
  • பிறகு நீங்கள் பதிவிறக்க விரும்பும் படம் அல்லது வெப் தொடரை தேர்வு செய்யவும்.
  • தற்போது 'Download' என்ற ஆப்சன் உங்களுக்கு காட்டும்.
  • எத்தனை எம்பி-யில் வேண்டும் என்பதை முடிவு செய்து கிளிக் செய்யவும். 
  • சில படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்க முடியாது. 
  • நீங்கள் பதிவிறக்கம் செய்த படங்களை Downloads என்பதில் பார்க்க முடியும்.
  • ஆண்ட்ராய்டு மொபைலில், ஒரே நேரத்தில் முழு சீசன்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

சந்தா கட்டணங்கள்

  • Netflix இந்தியாவில் நான்கு சந்தா திட்டங்களை கொண்டுள்ளது.  ரூ.149, ரூ.199, ரூ. 499 மற்றும் ரூ.649 வரை செல்லுபடியாகும் சந்தா உள்ளது. ஒவ்வொரு திட்டமும் கூடுதல் ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • Amazon Prime இந்தியாவில் பல்வேறு விலைகளுடன் பல சந்தா திட்டங்களை வழங்குகிறது.  ரூ. 299, ரூ. 599, ரூ. 1499, ரூ. 999 மற்றும் ரூ.599 ஆகிய விலையில் சந்தா திட்டங்களை வைத்துள்ளது.
  • Disney+ Hotstar குறிப்பிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விளம்பரங்களுடன் பார்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக, 5 நிமிட நேரடி கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கை பார்க்க முடியும்.  இது தவிர, ரூ.299, ரூ. 899 மற்றும் ரூ. 1499 விலையில் சந்தாக்கள் உள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News