ராக்கி பாயை ஒன்றாக சந்தித்த இளையராஜா - கமல் ஹாசன்

இசைஞானி இளையராஜாவும், நடிகர் கமல் ஹாசனும் கேஜிஎஃப் 2 படத்தை ஒன்றாக பார்த்து ரசித்தனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 07:39 PM IST
  • கேஜிஎஃப் 2 படம் பார்த்த இளையராஜா - கமல்
  • வசூலில் கலக்கும் கேஜிஎஃப் 2
  • ஒன்றாக படம் பார்த்த இளையராஜா - கமல்
ராக்கி பாயை ஒன்றாக சந்தித்த இளையராஜா - கமல் ஹாசன் title=

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.பான் இந்தியா படமாக வெளியான இப்படத்துக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. படத்தின் மேக்கிங், சண்டை காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி பக்கா பேக்கேஜாக ரசிகர்களுக்கு படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

மேலும், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

Yash

இந்தப் படம்  உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கிறது. இதனால் யாஷ் தன்னுடைய கேரியரில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க | குழந்தைகள் டீசரை பார்க்க வேண்டாம் - பயம் காட்டும் பிசாசு 2

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் பலரும் கேஜிஎஃப் 3க்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Kamal

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவும், நடிகர் கமல் ஹாசனும் கேஜிஎஃப் 2 படத்தை ஒன்றாக திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்தனர். இதுதொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | நாங்க பிரியவெல்லாம் இல்லை... ரசிகர்களுக்கு உணர்த்திய விக்னேஷ் - நயன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News