குழந்தைகள் டீசரை பார்க்க வேண்டாம் - பயம் காட்டும் பிசாசு 2

குழந்தைகள் யாரும் டீசரை பார்க்க வேண்டாம் என பிசாசு 2 படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 04:29 PM IST
  • நாளை வெளியாகிறது பிசாசு 2 டீசர்
  • குழந்தைகள் பார்க்க வேண்டாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது
குழந்தைகள் டீசரை பார்க்க வேண்டாம் - பயம் காட்டும் பிசாசு 2 title=

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படம் எடுக்கும் இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் இயக்கிய பிசாசு படம் பேய் படங்களிலேயே வித்தியாசமாக இருந்தது. அதன் காரணமாக அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பெற செய்தனர்.

இதனையடுத்து அவர் தற்போது பிசாசு 2 படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

மேலும் படிக்க | பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன் - ஆண்ட்ரியா பகீர்

இதற்கிடையே படத்தில் நிர்வாணமாக நடிக்க என்னை கட்டாயப்படுத்தினார்கள் என ஆண்ட்ரியா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Pisasu 2

இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியாக இருக்கிறது. அதற்கான விளம்பரத்தில் குழந்தைகள் யாரும் இந்த டீசரை பார்க்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - வெளியானது அதிகாரப்பூர்வ தலைப்பு

டீசருக்கே இப்படி கூறப்பட்டுள்ளதால் படத்தில் திகில் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதேசமயம், அடல்ட் காட்சிகள் இருப்பதால்கூட இப்படி விளம்பரம் செய்திருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News