மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் -கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசினார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 29, 2018, 03:51 PM IST
மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் -கமல் title=

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசினார். 

செய்தியாளர்களை சந்திபில் அவர் கூறியதாவது:-

நாட்டின் பல பகுதிகளுக்கு சாலை அமைப்பதற்கு எப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இருக்கிறதோ, அதேபோல காவிரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் அவசியம். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான விசியம் இல்லை. மத்திய அரசு நினைத்தால் அமைக்கலாம். ஆனால் ஓட்டுக்காக காவேரி விசியத்தில் விளையாடுகிறார்கள். 

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன். காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் வரவேற்பேன்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்திக்க களத்துக்கு செல்ல இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

 

 

 

 

Trending News