“ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே” - விக்ரம் சிங்கிளில் மத்திய அரசை சீண்டிய கமல்?

பத்தல பத்தல பாடலில் கமல் எழுதியிருக்கும் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

Written by - க. விக்ரம் | Last Updated : May 11, 2022, 07:53 PM IST
  • ஒன்றிய அரசை விமர்சிக்கும் கமல்
  • விக்ரம் சிங்கிள் வெளியானது
  • பத்தல பத்தல பாடல் வெளியானது
“ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே” - விக்ரம் சிங்கிளில் மத்திய அரசை சீண்டிய கமல்? title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் மே 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்தச் சூழலில் பத்தல பத்தல என்ற சிங்கிள் பாடல் இன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று அந்தப் பாடலும் வெளியானது.

Kamal, Ani

பாடலை கமல்ஹாசன் எழுதி, பாடியிருக்கிறார். பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | அடுத்தடுத்து கமிட்டாகும் நடிகர்கள்... ஏகே 61ல் இணைந்த கௌதம் மேனனின் உதவியாளர்

அந்தப் பாடலில், “ கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே. சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

Vikram

பாடலை கேட்ட ரசிகர்கள் கமல்ஹாசன் நேரடியாகவே மத்திய அரசை விமர்சித்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

 

அதேசமயம் மத்திய அரசை மேம்போக்காக விமர்சனம் செய்தாலே படத்துக்கு பிரச்னை வருமோ என்ற சூழலில் கமல் நேரடியாகவே விமர்சித்திருப்பதால் விக்ரம் படத்திற்கும் ஏதேனும் பிரச்னை வருமோ என கமல் ரசிகர்கள் கவலையும் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | பத்தல பத்தல... வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News