மீண்டும் தள்ளிப்போகும் எச் வினோத் - கமல்ஹாசன் படம்! இதுதான் காரணமா?

எச்.வினோத்துடன் கமல்ஹாசனின் அடுத்த படம் மேலும் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தாமதமாகி வருவதால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2023, 08:32 AM IST
  • எச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார்.
  • ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்.
  • பிக்பாஸ் தமிழ் சீசன் 7 முடிந்ததும் எச்.வினோத்துடன் கமல் இணைவார்.
மீண்டும் தள்ளிப்போகும் எச் வினோத் - கமல்ஹாசன் படம்! இதுதான் காரணமா? title=

நடிகர் கமல்ஹாசன் உலக நாயகனாக கொண்டாடப்படுகிறார். நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநராக என பல தளங்களிலும் 70 வயதை எட்டினாலும் 25 வயது இளைஞனின் ஆற்றலுடன் காணப்படுகிறார். தொடர்ந்து வொர்க் அவுட் செய்வது அவருக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் அவருக்கு நடிகராகவும், இயக்குநராகவும் நல்ல கை கொடுத்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கமல்ஹாசனை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்தியன் 3

இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியன் 3க்கான வேலைகளும் நடந்து வருவதாக அவர் கூறியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு பிறகு எச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கிடையில், பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு சில நாட்களே கால்ஷீட் கொடுத்துள்ளார், ஆனால் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி

பிக் பாஸ் & ப்ராஜெக்ட் கே 

இதற்கிடையில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களை முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச் வினோத்தின் சமூக உணர்வுள்ள படம் எடுப்பதில் வல்லவர். எச்.வினோத் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச் வினோத் திட்டத்தில் உண்மையான தாமதம் முக்கியமாக கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அர்ப்பணிப்பு காரணமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 முடிந்ததும் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கமல் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன்கள் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News