தீபாவிற்கு முதலிரவு நடந்ததா-இல்லையா..? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்…!

Karthigai Deepam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  

Written by - Yuvashree | Last Updated : Oct 14, 2023, 01:20 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், கார்த்திகை தீபம்.
  • இதில் தீபா-கார்த்திக்கிற்க்கு இடையே முதலிரவு நடக்குமா?
  • இந்த எபிசோட் அப்டேட்டில் தெரிந்து கொள்வோம்.
தீபாவிற்கு முதலிரவு நடந்ததா-இல்லையா..? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்…! title=

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எல்லோரும் கூட்டாக சேர்ந்து முதல் இரவு குறித்த அனுபவங்களை பகிர் தொடங்கிய நிலையில் சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மீனாட்சி முதல் இரவு நடந்த விஷயங்களை பகிர அதன் பிறகு ஐஸ்வர்யா அருள் வாழ்க்கை என்றால் என்னன்னு தெரியுமா என்று தத்துவம் பேச தொடங்கியது இப்படி எல்லாம் பேசினா என்னைக்கு மூட்டையை தூக்கிட்டு கிளம்பிடுவேன் என மிரட்ட அருண் காலில் விழுந்து இனி பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்கிறாள். 

Karthigai Deepam

அதனைத் தொடர்ந்து மீனாட்சி அபிராமி மற்றும் அருணாச்சலத்திற்கு எப்படி முதல் இரவு நடக்கும் என்பதை கற்பனை பண்ணி சொல்கிறேன் என ஒரு கதையை சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.

மேலும் படிக்க | தங்கையால் நின்று போன திருமணம்-பரிதவிக்கும் சகோதரிகள்! சந்தியா ராகம் முதல் எபிசோட்!

அத்துடன் நிறுத்தாமல் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு இடையே முதல் இரவில் என்னவெல்லாம் நடக்கும் என ஒரு கதையை பேசுகிறாள். மறுபக்கம் நிஜத்தில் தீபா அத்தையின் ஆசிர்வாதத்தோடு தான் முதலிரவு நடக்கணும் அதுவரைக்கும் நமக்குள்ள எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்போடு முதல் இரவு அறைக்குள் கார்த்தியின் அதேபோல் தற்போது நமக்கும் எதுவும் வேண்டாம் முதலில் நன்றாக பேசி புரிந்து கொள்வோம் என சொல்ல தீபா சந்தோஷம் அடைகிறாள். 

கார்த்திகை தீபம்

மறுநாள் காலையில் தீபா உள்ளே போனது போலவே வெளியே வர மீனாட்சி என்னாச்சு என்று விசாரிக்க தீபா எங்களுக்கும் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா எல்லா நடந்துடுச்சுனு ரொம்ப சந்தோஷ படாத என மிரட்டல் தோணியில் பேச தீபா பதில் ஏதும் பேசாமல் நிற்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கு வரும் 2 முக்கிய சீரியல்கள்..! சோகத்தில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News