தங்கையால் நின்று போன திருமணம்-பரிதவிக்கும் சகோதரிகள்! சந்தியா ராகம் முதல் எபிசோட்!

Sandhya Raagam First Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீரியல் சந்தியா ராகம். 

Written by - Yuvashree | Last Updated : Oct 9, 2023, 01:29 PM IST
  • ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் சந்தியா ராகம்.
  • இந்த சீரியல், குடும்ப பிண்ணனி கொண்ட கதையை கொண்டுள்ளது.
  • இன்றைய எபிசோடில் நடக்க இருப்பவை என்ன? இதோ விவரம்.
தங்கையால் நின்று போன திருமணம்-பரிதவிக்கும் சகோதரிகள்! சந்தியா ராகம் முதல் எபிசோட்! title=

இந்த சீரியல் முதல் எபிசோடான இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கோவில் திருவிழாவுடன் சீரியல் தொடங்க சந்தியா ஜானகி புவனேஸ்வரி ஆகிய கேரக்டர்கள் அறிமுகம் ஆகிறது. 

சந்தியாவுக்கு மாயா என்ற மகளும் கிஷோர் என்ற கணவரும் இருக்க ஜானகிக்கு தனலட்சுமி என்ற மகள் இருக்கிறாள். தான் காதலித்தவரை ஜானகி மணந்து கொண்டதால் பதவி மனதில் வைத்து வாழ்ந்து வருகிறாள் புவனேஸ்வரி.

கோவில் திருவிழாவில் மேளதாளத்துடன் ஜானகி முளைப்பாரி எடுத்துக் கொண்டு வர அந்த சத்தம் கேட்டு புவனேஸ்வரி எதிரில் இருந்து என் வாழ்க்கையை தட்டி பதிச்சுட்ட என மைண்ட் வாய்ஸில் பேச ஜானகி இது எனக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கை என மைண்ட் வாய்ஸில் பேசுகிறாள். இந்த நேரம் பார்த்து கோவில்களிலும் மணியடிக்க ஜானகி சந்தோஷமாகிறாள். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா

Sandhiya

அதன் பிறகு அமெரிக்காவில் இருக்கும் சந்தியா தன்னுடைய சகோதரி ஜானகியை நினைத்து ஏங்க இங்கே ஜானகி பெட்டிக்குள் இருக்கும் வளையலை பார்த்து பரிதவிக்கிறாள். பிளாஸ் கட்டில் கிஷோருடன் ஜானகிக்கு கல்யாணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க மணமேடை ஏறிய ஜானகி மாப்பிள்ளைக்காக காத்திருக்க சந்தியா கிஷோரை திருமணம் செய்து கொண்டு வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறாள். 

இதனால் அப்பா சந்தியாவை அவமானப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். 

மேலும் படிக்க | ராம் கொடுத்த அதிர்ச்சி, மகாவுக்கு ஷாக் - சீதா ராமன் சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News