30 ஆயிரம் தியேட்டரில் லியோ.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்! சுத்துபோட்ட நெட்டிசன்கள்

How Many Theaters Leo Releasing: உலகம் முழுவதும் 30 ஆயிரம் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Oct 6, 2023, 02:12 PM IST
  • விஜய் நடிப்பில் வெளியான லியோ டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு
  • தமிழ் சினிமாவுக்கு இசைவெளியீட்டு விழா என்பதையே விஜய் தான் தொடங்கி வைத்தார்.
  • அக்டோபர் 19-ம் தேதி லியோ படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
30 ஆயிரம் தியேட்டரில் லியோ.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்! சுத்துபோட்ட நெட்டிசன்கள் title=

Leo Movie Updates: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த டிரைலரை கொண்டாடி வரும் அதே வேளையில், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அரசியலில் ஆர்வத்துடன் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார் விஜய். மாணவர்களை அழைத்து படிப்பு தான் எல்லாம் என ஊக்கப்படுத்துவது, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவது என முழு வீச்சில் விஜய் செயல்பட்டு வருகிறார். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் தனது அரசியல் சார்ந்த பணிகளை கவனமாக செய்து வரும் விஜய், லியோ படத்திற்காக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

லியோ படத்தில் ஆபாச வாரத்தை

லியோ படத்தில் இடம்பெற்ற "நான் ரெடி தான் வரவா" பாடல் வெளியானதும் அதில் இடம்பெற்ற வரிகளுக்காகவும், வாயில் சிகரெட்டுடன் தோன்றும் விஜய்க்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு அந்த பாடலில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் விஜய் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், படுமோசமான கெட்ட வார்த்தை ஒன்றை சொல்கிறார். குறைந்தபட்சம் அதனை படக்குழு மியூட் செய்திருக்கலாம் என டிரைலரை பார்த்த பலரும் முகம் சுழித்தனர். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மேலும் பார்டிக்க - வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.. விஜய் ரசிகர்களுக்கு இதோ ட்ரீட்

உலகம் முழுவதும் 30 ஆயிரம் திரையரங்குகளில் லியோ

இந்த சூழலில் எக்ஸ் தளத்தில் நடந்த SPACE உரையாடலில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. அவர், உலகம் முழுவதும் 30 ஆயிரம் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகும் என்றும், தமிழ் சினிமாவுக்கு இசைவெளியீட்டு விழா என்பதையே விஜய் தான் தொடங்கி வைத்தார் என்றும் பேசினார். இதனைக் கண்ட சினிமா ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 30 ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்றும், தமிழ் சினிமாவின் ஆல் டைம் ரெக்கார்ட்டாக லியோ அமையும் என்று பேசுவதெல்லாம் வெறும் விளம்பர யுக்தி என அவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

லியோ படம் அக்டோபர் 19-ம் தேதி ரீலிஸ் ஆகிறது

உண்மையில் LEO திரைப்படத்தை தயாரிப்பது லலித் குமார் அல்ல லலித் குமார் என்ற பெயரில் விஜய் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்று ஆரம்பம் முதலே ஒரு பேச்சு வலம் வருகிறது. இந்த சூழலில் லலித்குமார் இப்படி பேசியிருப்பது அவருக்கு சினிமா பற்றிய புரிதல் இல்லாததை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் லியோ 1000 கோடிகளை தாண்டி கலெக்‌ஷன் எடுத்து தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையுமா என்பதை பொருத்திருந்து காணலாம்.

லியோ படத்தின் நடிகர் நடிகைகள் விவரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்திருக்கிறார்.

மேலும் பார்டிக்க - Leo Trailer Review: லியோ ட்ரெய்லர் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News