2026 தேர்தலில் போட்டியிடும் விஜய்? லியோ வெற்றி விழாவில் அவரே சாென்ன பதில்!

Leo Success Meet: லியாே வெற்றி விழாவில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணுவது குறித்து விஜய் சூசகமாக பேசியிருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 2, 2023, 06:45 AM IST
  • லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது.
  • விஜய், தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.
  • 2026 தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல்.
2026 தேர்தலில் போட்டியிடும் விஜய்? லியோ வெற்றி விழாவில் அவரே சாென்ன பதில்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் நிலையில், இதற்கான வெற்றி விழா (Leo Success Meet) நேற்று நடைப்பெற்றது. 

லியோ திரைப்படம்:

வெகு சில படங்களே இயக்கி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் குறைந்த ஆண்டுகளில் இடம் பிடித்தவர், லோகேஷ் கனகராஜ். நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியிருந்த இவர், இரண்டாவது முறையாக அவருடன் கைக்கோர்த்த படம் ‘லியோ’ (Leo). தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் பலர் இந்த படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்திருந்தனர். அது மட்டுமன்றி, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் (LCU) ஒரு அங்கமாக இப்படம் இருந்ததால் இப்படம் குறித்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்தன. உலகளவிலும் லியோ படம் வசூல் சாதனையை புரிந்து வருகிறது. 

வெற்றி விழா:

லியோ படம் வெளியாவதற்கு முன்னர் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Leo Audio Launch) நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாகவும், ரசிகர்கள் அதிகம் பேர் இதில் கலந்து கொள்ள பாஸ் கோரியதாலும் இந்த விழா நடைபெறாமல் போனது. விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க வேண்டும், படத்தின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தினை அளித்தது. இதை ஈடுகட்டும் விதமாக, ‘லியோ’ வெற்றி விழா (Leo Success Meet) நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் லியோ படக்குழுவினர் அனைவரும் இதில் பங்கேற்றனர். 

மேலும் படிக்க | தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

அரசியல் எண்ட்ரி குறித்து பேசிய விஜய்..? 

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதாக (Vijay Politics Entry) கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவலை நடிகர் விஜய் இதுவரை மறுத்ததும் இல்லை, ஏற்றதும் இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் அவர் மறைமுகமாக கள்ள சிரிப்பினை மட்டும் வெளிப்படுத்துகிறார். லியோ வெற்றி விழா நேற்று நடைப்பெற்ற நிலையில் விஜய் தன் பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி கூறினார்.

மேலும், “மக்கள்தான் மன்னன் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி” என்று பேசினார். இதையடுத்து லியோ பட விழாவை மேடையில் தொகுத்து வழங்கியவர், “அண்ணா..அந்த 2026?” என்று கேட்டார். அதற்கு விஜய், “கப்பு முக்கியம் பிகிலு..” என்றார். இதைக்கேட்ட ரசிகர்கள் கத்தி, கைதட்டி, கூச்சலிட்டு ஆரவாரம் எழுப்பினர். 

சினிமாவை விட்டு விலகும் விஜய்? 

நடிகர் விஜய், இன்னும் இரண்டு படங்களில் நடித்து விட்டு சினிமாவில் களமிறங்குகிறார் எனும் தகவல் சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்த வண்ணம் உள்ளது. தற்போது ‘தளபதி 68’ (Thalapathy 68) படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து இயக்குநர் ஷங்கருடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை அடுத்து விஜய் 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

மேலும் படிக்க | 2.0 வசூலை தூக்கி சாப்பிட்ட லியோ! வெளிநாட்டில் இப்படி ஒரு சாதனையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News