Keerthy Suresh: அரசியலில் நுழையும் கீர்த்தி சுரேஷ்..? அதுவும் இந்த கட்சியிலா..!

Keerthy Suresh in Politics: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல கட்சியில் அவர் உறுப்பினராக இணைய உள்ளாராம். 

Written by - Yuvashree | Last Updated : Jun 27, 2023, 09:54 AM IST
  • நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் நடிக்க உள்ளதாக தகவல்.
  • முன்னர், இவர் பாஜக கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
  • தற்போது ஒரு பிராலமான கட்சியில் இவர் சேர உள்ளாராம்.
Keerthy Suresh: அரசியலில் நுழையும் கீர்த்தி சுரேஷ்..? அதுவும் இந்த கட்சியிலா..! title=

பல தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர் கள்ளியாக வலம் வருபவர், கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், இப்போது  பான் இந்தியா நடிகையாக உருவாகிவிட்டார்.  இவர், முன்னாள் நடிகை மேனகாவின் மகள். ரஜினி, விஜய், துல்கர் சல்மான் போன்ற பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ளது. 

மாமன்னன் படத்தில் கீர்த்தி..

நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தான் ஒரு கம்யூனின்ஸ்ட் கதாப்பாத்திரத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்..! அதிரவைத்த திடுக்கிடும் உண்மைகள்..!

அரசியலில் நுழையும் கீர்த்தி:

கீர்த்தி சுரேஷ், குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். இவர் எப்போதும் ட்ரெண்டிங்கிள் இருப்பதும் வழக்கம். அப்படி கீர்த்தி குறித்த ட்ரெண்டிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர், விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழகத்தின் பிரபலமான கட்சிகளில் உறுப்பினராக கீர்த்தி இணைய உள்ளராம். 

இந்த கட்சியா? 

கீர்த்தி மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் நடித்த பிறகு அவருக்கு ஆந்திராவில் இருக்கும் சில அரசியல் கட்சிகளின் சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. இதையடுத்து கீர்த்தி ஆந்திராவில் ஒரு கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர், பாஜக கட்சியில் கீர்த்தி முக்கிய உறுப்பினராக இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதனை அவரது அம்மா மேனகா சுரேஷ் மறுத்துவிட்டார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் நடித்திருப்பதால் திமுகவில் அவர் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து திமுக கட்சியில் இருந்து அவருக்கு தனியாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கீர்த்திக்கு அரசியலில் ஆர்வம் உள்ளதா?

கீர்த்தி சுரேஷ் இதுவரை தனது படத்திலோ அல்லது பொது வெளியிலோ அரசியல் குறித்து எதுவும் பேசியதில்லை. ஆனால், எது செய்தாலும் நேர்மையாகவும் திறம்படவும் செய்து வருகிறார். அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. கீர்த்தி சுரேஷிற்கு நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஒருவர் கூட சில நாட்களுக்கு முன்னதாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் கீர்த்திக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல்கள் அனைத்தையும் உண்மையான அறிவிப்புகள் வெளியான பிறகே உறுதிப்படுத்த முடியும். 

மேலும் படிக்க | விஜய்யுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்? ‘வடசென்னை’ இயக்குநர் சொன்ன இனிப்பான தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News