புஷ்பா செய்த சதியால் சக்திக்கு அதிர்ச்சி..மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இத்தனை ட்விஸ்டா!

Meenakshi Ponnunga Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2023, 01:40 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களூள் ஒன்று, மீனாட்சி பொண்ணுங்க.
  • இன்று விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இந்த தொடரின் கதை அமந்துள்ளது.
  • சக்திக்கு இந்த எபிசோடில் அதிர்ச்சி காத்துக்கிடக்கின்றது.
புஷ்பா செய்த சதியால் சக்திக்கு அதிர்ச்சி..மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இத்தனை ட்விஸ்டா! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமா சீரியல்களுள் ஒன்றாக வலம் வருவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

நேற்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நேற்றைய எபிசோடில் சக்தி, யமுனா, சாந்தா என மூவரும் அவர்களது பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்க துர்கா பாத்திரம் துலக்க வீட்டின் பின்புறம் செல்கிறாள்.  அப்போது அங்கு வரும் புஷ்பா துர்காவிடம், நீ சங்கிலியை கல்யாணம் செய்துகொண்டால், இந்த எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும், யமுனா கார்த்திக்கை கோகிலாவிடம் சொல்லி நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்ல, முதலில் அதை நிராகரிக்கும் துர்கா பின்பு யோசிக்க ஆரம்பிக்கிறாள். 

Meenakshi Ponnunga

இதை தொடர்ந்து பூஜாவை தன் வீட்டிற்கு வர வைக்கும் புஷ்பா பூஜாவிடம் நாளை நடக்கும் பஞ்சாய்த்துக்கு சக்தி வரக் கூடாது என்கிறாள்.  கோகிலாவிடம் பேசும் புஷ்பா, நாளை பஞ்சாயத்தில் சங்கிலிக்கும் துர்காவுக்கும் கல்யாணம் நடக்க உதவி கேட்கிறாள்.

மேலும் படிக்க | தன்னை பைத்தியம் என்று கலாய்த்த பிரபல இயக்குநருக்கு பார்த்திபன் அளித்த ‘நச்’ பதில்..!

இன்றைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றியிடம் நாளை பஞ்சாயத்து என்று சொல்லி பேச அதை பற்றி வெற்றி கவனமாக கேட்டு கொள்கிறான். ஆனாலும் என்னால் உதவ முடியாது என்று சாதாரணமாக சொல்லி விட சக்தி டென்ஷன் ஆகி வெற்றியை திட்டுகிறாள். 

Meenakshi Ponnunga

அடுத்து புஷ்பா துர்காவிடம் நாளை பஞ்சாயத்தில் உன் கழுத்தில் சங்கிலி தாலி கட்ட வேண்டும், இல்லையென்றால் யமுனாவின் கழுத்தில் இருக்கும் தாலி இறங்கி விடும் என்று சொல்லி மிரட்டுகிறாள். அதன் தொடர்ச்சியாக புஷ்பா கோகிலாவிடம் தனது திட்டத்தை சொல்ல கோகிலாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறாள். மறுநாள் அனைவரும் பஞ்சாயத்துக்கு கிளம்பி போகிறார்கள்.

சக்தி பஞ்சாயத்துக்கு வரக்கூடாது என்பதால் அவள் இருக்கும் அறையை பூஜா பூட்டி விடுகிறாள். பிறகு பஞ்சாயத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை சொல்லுகிறாள் சக்தி அதிர்ச்சி அடைகிறாள். பஞ்சாயத்தில் சக்தி வரவில்லை என்று என்று சாந்தா சொல்ல அவள் வரும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது, சீக்கிரம் பஞ்சாயத்தை ஆரம்பியுங்கள் என்று கோகிலா உட்பட அனைவரும் சொல்ல ரங்கநாயகி யமுனா, கார்த்திக் திருமணம் செல்லாது என்றும் தாலியை கழற்றி பாலில் போடும்படியும் அதிர்ச்சி கர தீர்ப்பை கொடுக்கிறாள்.

காணத்தவறாதீர்கள்..

இப்படியான விறுவிறுப்பாக இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Adipurush: ‘இந்த படம் எனக்கு அடிச்ச லக்..’ ஆதிபுருஷ் படவிழாவில் நடிகர் பிரபாஸ் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News