தன்னை பைத்தியம் என்று கலாய்த்த பிரபல இயக்குநருக்கு பார்த்திபன் அளித்த ‘நச்’ பதில்..!

Parthiban on Pradeep Ranganathan: சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற படம், லவ் டுடே. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.  

Written by - Stalin | Last Updated : Jun 7, 2023, 09:47 AM IST
  • பார்த்திபன், லவ் டுடே படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
  • இந்த படத்தில், பார்திபனை தாக்குவது போன்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.
  • இது குறித்து பார்த்திபன் பேசியுள்ளார்.
தன்னை பைத்தியம் என்று கலாய்த்த பிரபல இயக்குநருக்கு பார்த்திபன் அளித்த ‘நச்’ பதில்..! title=

அண்மையில் கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த வெற்றிப்படம்,  'லவ் டுடே'. ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரதீப் ரங்கநாதன். இவரது அடுத்த படைப்பாக வெளிவந்ததுதான், லவ் டுடே. இதில், இந்த டெக்னாலஜி யுகத்தில் காதல் எப்படி உள்ளது என்பதை வைத்துத்தான் இந்த படம் உருவாகியிருந்தது. அவரே இதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தின் கான்செப்டும் அதில் இடம் பெற்றிருந்த அம்சங்களும் இளசுகளை பயங்கரமாக கவர, படம் சூப்பர் ஹிட் அடித்தது. அறிமுக நடிகர் ஒருவரின் படத்திற்கு இந்தளவு வரவேற்பு கிடைத்தது உச்ச நட்த்திரங்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது. 

பார்த்திபன் குறித்த வசனம்..

லவ் டுடே படத்தில் கதையின் படி நாயகனும் நாயகியும் தங்களது செல்போன்களை மாற்றிக்கொள்வர். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் உண்டாகும். அப்போது பிரதீப் ரங்கநாதன் வரும் ஒரு காட்சியில் அவரது நண்பர் ஒருவர்,  “நல்லாத்தானே பேசிக்கிட்டுருந்த  திடீரென ஏன் பார்த்திபன் மாதிரி பேசுற..” என்பது போன்ற டைலாக் ஒன்று இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியோ, வசனமோ அப்போது கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கொடுத்துள்ள ஒரு நேர்காணலின் மூலம் இந்த விஷயம் பேசு பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | Lust Stories 2: புது பட டீசரில் படு கவர்ச்சி காட்டிய தமன்னா..செம ஷாக்கில் ரசிகர்கள்..!

பிரதீப் குறித்து பார்த்திபன்..

லவ் டுட  படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கும் தனக்கும் இடையிலான பிரச்சனை குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த விஷயம் ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவ் டுடே  படத்தில் தன்னை தாக்கும் வகையில், இடம்பெற்றுள்ள என்ற வசனம் தன்னை விமர்சிப்பதாக பார்த்திபன் தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். அந்த டைலாக்கை கேட்ட போது தனக்கு புரியவில்லை என்றும்  நன்றாக இருக்கும் ஏன் பைத்தியம் போல் பேசுகிறாய் என்பதுதான் அந்த வசனத்திற்கு அர்த்தம் என்பது எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்விரோதம் காரணமா? 

கோமாளி படம் வெளிவந்த போது கதை திருட்டு சர்ச்சை விவகாரத்தில் சிக்கியது. இது குறித்து குற்றசம் சாட்டியவர், பார்த்திபனின் உதவி இயக்குநர். இது குறித்தும் பார்த்திபன் தனது நேர்காணலில் கூறியிருந்தார். அதில், கோமாளி பட கதை குறித்த சர்ச்சை எழுந்தபோது  தான் தனது உதவி இயக்குனர்  கிருஷ்ணமூர்த்தி பக்கம்  நின்றதால் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னை லவ் டுடே படத்தில்  விமர்சித்துள்ளதாக பார்த்திபன் கூறினார்.     

கதை திருட்டு சர்ச்சை விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ் பார்த்திபனின் உதவி இயக்குநருக்கு ஆதரவாக கருத்துகளை கூறினார்.  “என்னுடைய உதவியாளருக்கு நான் ஆதரவாக இருந்ததால் ஒருவேளை பிரதீப் ரங்கநாதனுக்கு என் மீது கோபம் இருந்திருக்கும், அதனால் ஒரு சிறிய பழிவாங்கலாக அந்த வசனம் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்” என கூறியிருக்கிறார் 

“அவருக்கும் மெச்யூரிட்டி வந்துரும்..”

பிரதீப் ரங்கநாதனின் அபாரமான வளர்ச்சியை தான் மிகவும் வியப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார். லவ் டுடே படத்தை தான் எப்படி ரசித்தேன் என்பதை பிரதீப்பிற்கு வாய்ஸ் மெஸேஜாக அனுப்பியதாகவும் அப்படம் குறித்து பல மேடைகளில் தான் பேசி வருவதாகவும் பார்த்திபன் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். “லவ் டுடே குறித்து பல மேடைகளில் பேசுவது என்னுடைய மெச்யூரிட்டு..இது சில நாட்களில் பிரதீப்பிற்கும் ஒரு நாள் வரும்..” என்று பார்த்திபன் கூறினார். 

மேலும் படிக்க | காலா பட க்ளைமேக்ஸில் ரஜினி இறந்தாரா இல்லையா? 5 ஆண்டுகளாகியும் அவிழ்க்க முடியாத மர்மம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News