சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

Meenakshi Ponnunga TV Serial Online: இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி ரங்கநாயகியை மீறி வீட்டுக்குள் வரவும் பூஜா சக்திக்கு எதிராக எதையாவது செய்யும் படி தூண்டி விடுகிறாள்.   

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2023, 12:26 PM IST
  • சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி.
  • நடக்க போவது என்ன?
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி ரங்கநாயகியை மீறி வீட்டுக்குள் வரவும் பூஜா சக்திக்கு எதிராக எதையாவது செய்யும் படி தூண்டி விடுகிறாள்.  புஷ்பாவை அடிப்பதற்காக சக்தி கையில் ஒரு கட்டையுடன் செல்கிறாள். அவளை யமுனாவும் துர்காவும் வாசலிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள். அங்கே வந்த திடியனும் சக்தியை தடுத்து நிறுத்துகிறான். ஆனால் சக்தி எல்லோரையும் மீறி புஷ்பா வீட்டுக்கு செல்கிறாள்.

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து விலகும் கமல்? இனி இவருக்கு பதில் ‘அந்த’ நடிகர்தான் தொகுப்பாளர்!

மேலும் அவள் கையை கட்டி தெருவில் இழுத்து வருகிறாள். சங்கிலியும் நீதிமணியும் சக்தியை தடுப்பதற்காக பின்னாடி ஓடி வருகிறார்கள். சக்தி புஷ்பாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறாள்.காவல் நிலையத்திற்கு வெற்றியும் திடியனும் வருகிறார்கள்.  இதனால் ரங்கநாயகியும் யோசிக்கிறாள்.  பூஜாவும் புஷ்பாவும் சக்தியை அடக்கி வைக்க, கார்த்திக்கிற்கு இரண்டாவது கல்யாணத்தை செய்தால் தான் சரியாக வரும் என்று திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் சக்தி பூஜாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சரண்யா மற்றும் வெற்றியுடன் சேர்ந்து திட்டமிடுகிறாள். 

mp

கோகிலா ரங்கநாயகியைப் பார்த்து பேச வர, இதனால் சந்தேகமாகும் சக்தி யமுனாவுக்கு ஃபோன் செய்து, கார்த்திக்கிடம். பேசிப் பார் என்று சொல்கிறாள். கார்த்திக் நடந்து வந்து கொண்டிருக்க, பிரியா என்னும் ஒரு பெண் அவன் மீது தெரியாமல் ஸ்கூட்டியை மோதி விடுகிறாள். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கார்த்திக் அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது யமுனாவிடம் இருந்து போன் வர, பிரியா போனை அட்டெண்ட் செய்து பேசிவிட்டு, கார்த்திக் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லி கட் செய்து விடுகிறாள். கார்த்திக் போனை ஒரு பெண் எடுத்து பேசி கட் பண்ணியதால் யமுனா அப்செட் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News