கார்த்திகை தீபம் அப்டேட்: வெளிவந்த உண்மை.. சிக்கிய பல்லவி, கார்த்திக்கு அதிர்ச்சி.. அடுத்து நடக்க போவது என்ன?

Karthigai Deepam Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திக்கை தீபம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2023, 01:31 PM IST
  • சந்தேகப்படும் மீனாட்சி.
  • அதிர்ச்சி அடையும் பல்லவி.
  • உண்மையை கண்டுபிடிக்கும் கார்த்திக்.
கார்த்திகை தீபம் அப்டேட்: வெளிவந்த உண்மை.. சிக்கிய பல்லவி, கார்த்திக்கு அதிர்ச்சி.. அடுத்து நடக்க போவது என்ன?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம்: 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திக்கை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியால் சண்டையிட அவன் நாளைக்கு ரெக்கார்டிங் முடிந்ததும் பல்லவி கிளம்பிடுவாங்க என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்தேகப்படும் மீனாட்சி

அதாவது, ரூபஸ்ரீ பல்லவிக்கு போன் செய்து என்ன நடக்குது என்னாச்சு என்று விசாரிக்கும் போது பல்லவி இங்கே நடக்கும் விஷயங்களை சொல்ல அவள் சரி போற வரைக்கும் போகட்டும் பார்த்துக்கலாம் என்று சொல்லி போனை வைக்க மீனாட்சி பல்லவி பேசுவதை பார்த்து ஏதோ தப்பா இருக்கே என்று சந்தேகமடைகிறாள். அதே நேரம் பல்லவியும் மீனாட்சியை பார்த்து விட இவங்களுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகிறாள்.

மேலும் படிக்க | Nayanthara-Vignesh Shivan:இணையத்தை கலக்கும் நயன்-விக்கியின் க்யூட் புகைப்படங்கள்!

அதிர்ச்சி அடையும் பல்லவி

அடுத்து மீனாட்சி கார்த்திக்கு தெரிந்த ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி குறித்து சொல்லி உதவி கேட்கிறாள். அடுத்து மறுநாள் ரெக்கார்டிங்கிற்காக பல்லவி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது மீனாட்சி பேசிய போலீஸ் ஆட்டோவை நிறுத்தி நீங்க யார்? என்று விசாரிக்க பல்லவி என்று பெயரை சொல்ல அடையாள அட்டையை காட்ட சொல்ல பல்லவி அதிர்ச்சி அடைகிறாள். போலீஸ் தொடர்ந்து அவளிடம் id கார்ட் காட்டினால் தான் விட முடியும் என்று சொல்லி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கார்த்திக் எனக்கு தெரிந்த பொண்ணு தான் என்று சொல்லி பல்லவியை அழைத்து செல்ல தீபாவும் ஆபிஸ் வந்து விடுகிறாள். 

ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்ல அவள் எப்பவும் கோவிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன் என்று அனுமதி கேட்க கார்த்திக் வேறு வழியில்லாமல் சீக்கிரம் வந்துடுங்க என்று அனுப்பி வைக்க தீபாவும் கூட செல்கிறாள். கோவிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி நான் மாட்டிக்க கூடாது என்று வேண்டுகிறாள். 

உண்மையை கண்டுபிடிக்கும் கார்த்திக்

பிறகு தீபா இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும் என்று சொல்லி அழைத்து வர மீண்டும் பல்லவி தொண்டை சரியில்லை கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாக நேரத்தை கடுத்துகிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க ஓகே சொல்லி பாட ஆரம்பிக்க கார்த்தி இந்த குரலை உன்னிப்பாக கேட்க இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் என்பதை கண்டுபித்து ரெக்கார்டிங்கை நிறுத்தி யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும் என அனுப்பி வைத்ததாக சொல்ல கார்த்திக் அவளை திட்டி அனுப்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக வெளியே கிளம்ப தீபா பின்தொடர்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 2023-ல் மண்ணுலகை விட்டு மறைந்த 10 கலைஞர்கள்! கண்கலங்க வைத்த நடிகர்களின் இறப்பு.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News