20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!

Meera Jasmine Update: திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : May 10, 2023, 11:08 AM IST
  • 'டெஸ்ட்' படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
  • 'டெஸ்ட்' படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
  • இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படம் வெளியாகலாம்.
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் நடிக்கும் மீரா ஜாஸ்மின்! title=

பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் திரையுலகில் பிரபலமாக இருந்த காலத்திலும் சரி, திரையுலகை விட்டு விலகிய பின்னரும் சரி, இவருக்கு ரசிகர்களிடமிருந்த வரவேற்பு அப்போது இருந்த மாதிரியே இப்போது குறையாமல் இருந்து வருகிறது.  இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார், இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்களும் ஆண் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.  திருமணத்திற்கு இவரை பெரிதாக திரைப்படங்களில் காண முடியாமல் போனது, சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார்.  தற்போது தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து தனது ரசிகர்களை மகிழ்விக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | என்னது நிஜ குந்தவை இவங்களா? ஆச்சரியப்படுத்தும் அரிய புகைப்படம்

மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் செய்தியினை கேட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  அந்த செய்தி மீரா ஜாஸ்மின் எந்த நடிகரின் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது தான், இருபது வருடங்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார்.  தமிழில் மீரா ஜாஸ்மின் அறிமுகமானதே மாதவனின் படத்தில் தான், லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் இந்த ஜோடி நடித்து நல்ல வரவேற்பை பெற்று படமும் ஹிட் ஆனது.  அதன்பின்னர் கடந்த 2004ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மாதவனுடன் சேர்ந்து மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த காம்போ 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்தது, இவர்களது கெமிஸ்ட்ரி பலரையும் வெகுவாக கவர்ந்து ரசிக்க வைத்தது.  அதற்கு பின்னர் இந்த ஜோடியை ஒன்றாக திரையில் காண முடியாமல் ரசிகர்கள் கவலைப்பட்டு வந்த நிலையில், தற்போது ரசிகர்கள் இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண போகிறார்கள்.

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் தான் மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.  இந்த படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், ராஷி கண்ணா மற்றும் காளி வெங்கட் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  விக்ரம் வேதா, இறுதி சுற்று மற்றும் மண்டேலா போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நடிப்பதை உறுதி செய்துள்ளது.  'டெஸ்ட்' படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பினை தயாரிப்பாளர் குழு மீரா ஜாஸ்மின் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் கொண்ட போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.   இந்த படத்தில் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  இதுவரை பாடகியாக அனைவரது மனதிலும் ஆட்சி செய்து வந்த சக்திஸ்ரீ கோபாலன், இனிமேல் இசையமைப்பாளராக புதிய அவதாரமெடுத்து அனைவரது இதயத்திலும் ஆட்சி செய்யப்போகிறார்.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Beast Mode:திரையை தீ பிடிக்க வைத்த பீஸ்ட் மோட் பாடல் வீடியோ..சில நொடிகளிலேயே பல ஆயிரம் லைக்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News