உலகநாயகனுக்கு மெகா ஸ்டார் வைத்த விருந்து

விக்ரம் படம் தன்னை கவர்ந்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் ஹாசனுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இரவு விருந்து வைத்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 12, 2022, 02:12 PM IST
  • கமல் ஹாசனுக்கு சிரஞ்சீவி விருந்து வைத்தார்
  • விக்ரம் ஹிட்டானதால் சிரஞ்சீவி இல்லத்தி இரவு விருந்து
 உலகநாயகனுக்கு மெகா ஸ்டார் வைத்த விருந்து title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி வெளியான படம் விக்ரம். கமல் ஹாசன், விஜய் சேதுபதில், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நீண்ட நாள்கள் கழித்து வெளியாகும் கமல் படம் என்ற எதிர்பார்ப்பு, கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கமலை முதல் முதலாக இயக்கும் படம் என்ற எதிர்பார்ப்பு என பல எதிர்பார்ப்புகளுக்குடையே வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது.

Kamal

கமல் ஏற்கனவே நடித்த விக்ரம் படத்தையும், லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கியிருந்த கைதி படத்தையும் இந்தப் படத்தில் இணைத்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இதன் மூலம் LCU (Lokesh Cinematic Universe) என்ற வார்த்தையும் உருவாகியிருக்கிறது. இதுவரை விக்ரம் படம் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

Salman Khan

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரை தனது வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து வைத்தார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் கலந்துகொண்டார்.

 

இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான விக்ரம் படத்தின் வெற்றிக்கு மட்டற்ற மகிழ்ச்சி, இதற்காக என் அன்பான நண்பர் கமல் ஹாசனை பாசத்திற்குரிய சல்மான் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து கொண்டாடி கவுரவித்தேன். தீவிரமான த்ரில்லர் படம் விக்ரம். அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விக்ரம் ஆடும் ருத்ரதாண்டவம் - மீண்டும் தள்ளிப்போனது யானை திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News