மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்!

Mission Chapter 1: இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிக்கும் மிஷன் சாப்டர்1 படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது.    

Written by - RK Spark | Last Updated : Jan 8, 2024, 02:19 PM IST
  • அருண் விஜய் நடிக்கும் மிஷன் படம்.
  • ஜனவரி 12 அன்று வெளியாகிறது.
  • இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்! title=

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.  எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது" என்றார். நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, "இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான் இத்தனை நாள் காத்திருந்தேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு இந்த சந்தோஷத்தைக் கொடுத்த விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் சார் போல கடினமாக உழைத்த யாரையும் நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

நடிகர் நாசர், "இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு. இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு. ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார்.  படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். ஆக்‌ஷன் என்பதையும் தாண்டி படத்தில் அழகான எமோஷன் உள்ளது. தியேட்டரில் படம் பாருங்கள்" என்றார்.

மேலும் படிக்க | Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

இயக்குநர் விஜய், "விழாவிற்கு வந்ததற்காக நாசர் சாருக்கு நன்றி. மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. படம் உருவாகக் காரணமாக இருந்த ராஜசேகர் சாருக்கு நன்றி. லைகா உள்ளே வந்ததும் படம் இன்னும் பெரிதானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் எனச் சொல்லி 'அச்சம் என்பது இல்லையே' என்பதை 'மிஷன் சாப்டர்1' ஆக மாற்றினார்கள். அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. இந்தப் படம் எமோஷனலாக எனக்கு முக்கியமானது. ஏமிக்கு கோவிட் என்பதால் வர முடியவில்லை. 

சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. 'மிஷன் சாப்டர்1' படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை. பின்புதான்  சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது. இயலும் ஜிவி பிரகாஷூம் இந்தப் படத்தின் ஆன்மா. இயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தைத் தாண்டி எனக்கும் ஜிவிக்கும் நல்ல நட்பு உள்ளது. விழாவிற்கு அவர் இன்று வரமுடியாத ஒரு சூழல். அவர் சார்பாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் மொத்தக் குழுவுக்கும் நன்றி. பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. 'கேப்டன் மில்லர்', 'அயலான்', 'மெரி கிறிஸ்துமஸ்' என பொங்கலுக்கு வரும் எல்லாப் படங்களும் வெற்றிப் பெற வேண்டும்".

நடிகர் அருண் விஜய், "விழாவிற்கு வந்திருக்கும் நாசர் சாருக்கு நன்றி. என் அப்பாவைப் போலதான் இவரையும் பார்க்கிறேன். பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர் 1' என்பதால் இது எனக்கு இன்னும் ஸ்பெஷல். விஜய் சார் சொன்னது போல இந்தப் படப்பிடிப்பின்  போது மழை, செட் சேதமானது என நிறைய சவால்களை சந்தித்தோம். லண்டன் சிறையை போல இங்கு நாலரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் அற்புதமாக உருவாக்கினார்கள். ஆர்ட் டிரைக்டருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லா பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். வேறு மாதிரியான ஒரு ஆக்‌ஷனை இதில் முயற்சி செய்திருக்கிறோம். என்னை வேறு மாதிரி இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். டிரெய்லரில் பார்க்காத பல எமோஷன் படத்தில் இருக்கிறது. ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News