எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

அருண் K பிரசாத் எழுத்து மற்றும் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்கரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2024, 06:14 PM IST
  • எம்எஸ் பாஸ்கர் பாத்திரத்தில் நடிக்கும் அக்கரன்.
  • இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
  • விரைவில் படம் வெளியாக உள்ளது.
எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா! title=

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம்எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,  மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "அக்கரன்".  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது, இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். 

மேலும் படிக்க | Anjana Arjun : ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளை பார்த்துள்ளீர்களா?

பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி. 

தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது, நான் சினிமாவிற்கு மிகவும் புதிது. என் நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது. எனக்கு சினிமா செய்யும் ஐடியா எதுவும் இல்லை. கார்த்திக்,கருப்பசாமி எனத்  திருப்பரங்குன்றம் நண்பர்கள் இணைந்து எல்லோரும் பேசினோம் உடனே குன்றம் புரடக்சன்ஸ் எனப் பெயர் வைத்தோம். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. ஷிவானி பிலிம்ஸ் சார்பில் செந்தில் பேசியதாவது, சினிமா எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம் என்பார்கள், ஆனால்  ஒரு படத்தைக் கஷ்டப்பட்டு எடுத்தால் கண்டிப்பாக ஈஸியாக ரிலீஸ் செய்யலாம். அக்கரன் அந்த மாதிரியான ஒரு நல்ல படம். அதை ஷிவானி சினிமாஸ் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி. நன்றி.

இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது, நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம் எஸ் பாஸ்கரைத் தெரியும், அவர் பெயர் சொன்னவுடனே தயாரிப்பாளர் ஆபிஸ் போட்டுத் தந்து விட்டார்.  இருவருக்கும் நன்றிகள்  இப்படத்தில் கேமராமேன்  ஆனந்த் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். படத்தில் எம் எஸ் பாஸ்கர் அப்பா அட்டகாசமாக நடித்துள்ளார், இப்படம் புதுமையாக இருக்கும். இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

மேலும் படிக்க | ‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News