Madhan Karky About GOAT Whistle Podu Song : விஜய்-வெங்கட் பிரபு, முதன்முறையாக GOAT (Greatest Of All Time) படம் மூலம் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
GOAT முதல் சிங்கிள்:
GOAT படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மீதுள்ள அன்பு காரணமாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ‘விசில் போடு’ என இப்பாடலுக்கு பெயர் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜய்-யுவன் கூட்டணிக்கும் GOAT படம்தான் முதலாவது. இதனால், இப்பாடல் குறித்த அறிவிப்பு வெளியான பாேது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியானது.
நெகடிவ் விமர்சனங்கள்..
‘விசில் போடு’ பாடலுக்கு எட்டுத்திக்கில் இருந்தும் எக்கச்சக்கமான நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தன. இப்பாடலை, கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்கி எழுதியிருந்தார். ‘நண்பா-நண்பி விசில் போடு’ என்ற வரிகளை இவர்தான் உண்மையாகவே எழுதினாரா என்பதை ரசிகர்கள் நம்ப மறுத்தனர். அது மட்டுமன்றி, யுவன் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருந்த அவர்கள் ‘என்னனா பாட்டு இது.’ என்று அவர் மீதும் விமர்சனங்கள் தூக்கி அடித்தனர்.
மதன் கார்கி கொடுத்த ரிப்ளை..
பாடலாசிரியர் மதன்கார்கி, சமீப காலமாக பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில், கோட் படத்தின் விசில் போடு பாடல் பெற்றுள்ள நெகடிவ் விமர்சனத்திற்கும் பதில் கொடுத்துள்ளார்.
பாடலுக்கு பலர் பாசிடிவான விமர்சனங்களை தான் கொடுத்திருப்பதாக கூறும் இவர், ஒரு சிலர் மட்டும்தான் நெகடிவாக பேசி வருவதாகவும் பேசியிருக்கிறார். மேலும், எக்ஸ்பரிமெண்டிற்காக எழுதப்படும் பாடல்களுக்கு இது போன்ற விமர்சனங்கள் வரும் என்றும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு பாடலும் தனக்கு ஒரு பாடம் என்று கூறும் இவர், அனைத்தையும் பாசிடிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
வெங்கட் பிரபு கூறியது:
இயக்குநர் வெங்கட் பிரபு விசில் போடு பாடலின் வரிகளை கேட்டு விட்டு அனைத்தும் ஈர்க்கும் வகையில் இருப்பதாகவும், யுவன் உடன் கலந்துரையாடிவிட்டு இதற்கு மெட்டு போடலாம் என்று கூறியதாகவும் மதன் கார்கி பேசியுள்ளார்.
விசில் போடு பாடலுக்கு முதலில் தேர்ந்தெடுத்த பெயர்..
இப்பாடலுக்கு ‘விசில் போடு’ என்று பெயர் வைப்பதற்கு முன்னர், ‘சல்யூட்’ என்ற பெயரைத்தான் தேர்ந்தெடுத்ததாக பேசியிருக்கிறார் மதன் கார்கி. 4 நண்பர்கள், பார்டிக்கு போகையில் எப்படியிருக்கும் என்று யோசித்துதான் இந்த பாடலை எழுதியிதாக மதன் கார்கி பேசியிருக்கிறார்.
ரசிகர்களை ஈர்த்ததா?
விசில் பாேடு பாடல் நன்றாக இருப்பதாக சில ரசிகர்கள் பேசினாலும், ஒரு சிலர் இப்பாடல் மனதிலேயே ஒட்டவில்லை என்று கூறி வருகின்றனர். மேலும், விஜய் படத்திற்கு மெட்டு போடுவதற்கும் முதல் பாடலை மாஸாக மாற்றுவற்கும் அனிருத்தான் சரியானவர் என்று கூறும் அவர்கள், இப்போது அனி(ல்)ருத்தை மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
சாதனை படைத்த பாடல்…
விசில் பாேடு பாடலுக்கு விமர்சனங்கள்தான் சரியாக இல்லையே தவிர, வியூஸ்கள் எக்கச்சக்கமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே 25 மில்லியன் ரியல் டைம் வியூஸ்களை கடந்தது. தற்பாேது, இப்பாடல் 35 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் செய்த சாதனை! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ