வந்துட்டாருய்யா வந்துட்டாரு - பட்டையை கிளப்பும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்

  வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 1, 2022, 05:08 PM IST
  • நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு
  • டிசம்பர் 9ஆம் தேதி படம் ரிலீஸ்
  • இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது
வந்துட்டாருய்யா வந்துட்டாரு - பட்டையை கிளப்பும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர் title=

வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் களமிறங்குகிறார் வடிவேலு. அந்தவகையில், தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வடிவேலுவிடமிருந்து வாங்கிய சுராஜ் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.  

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு பாடியிருந்தார்.

அதேபோல் சமீபத்தில் படத்தின் இரண்டாவது பாடலான பணக்காரன் பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பியது. படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெயலரில் வழக்கம்போல் வடிவேலு காமெடியில் சுழன்று அடிக்கிறார்.படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது ட்ரெய்லர்.  ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை தற்போது அதிகம் பகிர்ந்துவருகின்றனர். 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News