நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?... விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ

விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 19, 2022, 02:41 PM IST
  • தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற நயன் விக்னேஷ் சிவன்
  • மகாபலிபுரத்தில் நயன் திருமணம் நடந்தது
நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?... விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ title=

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்வரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் தாலி எடுத்துக்கொடுத்தார் என்ற தகவலும் வெளியானது.

இதற்கிடையே தங்களது திருமணத்தை ஒட்டி அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து அசத்தினர் இருவரும்.

திருமணம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விக்னேஷ் சிவனும், நயனும், “இதுவரை எங்களுக்கு எப்படி ஆதரவு கொடுத்து வந்தீர்களோ அதேபோல் இனியும் கொடுக்க வேண்டும். உங்களது வாழ்த்தும், ஆசீர்வாதமும் எப்போதும் எங்களுக்கு வேண்டும்” என்றனர்.

Nayanthara

அந்த செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹனிமூன் எங்கே என்று இருவரிடமும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இரண்டு பேரும் பதிலேதும் கூறாமல் சிரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். மேலும், நயன்தாரா தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருப்பதால் ஹனிமூன் செல்லும் ப்ளான் இல்லை என்றும் கூறப்பட்டது.

மேலும் படிக்க  | கமலுக்குக் கோவில்.. ஆண்டவரை நிஜமாகவே ஆண்டவர் ஆக்கிய ரசிகர்கள்! - அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நயன் - விக்னேஷ் சிவன் இருவருமே இடம்பெறவில்லை.

ஆனால், TheSiamHotel என்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த ஹோட்டலானது தாய்லாந்தில் இருப்பதாக கூகுள் சொல்வதால் அவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Thesiam Hotel

அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தும்வருகின்றனர். நயன் நடித்த O2 படம் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

மேலும் படிக்க } 6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அவமானம்... கார்த்தி ரசிகர்களுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பு

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இந்த ட்ரிப்பை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய பிறகு ஸ்க்ரிப்ட் தொடர்பான வேலைகளில் விக்னேஷ் சிவன் ஈடுபடுவார் என தெரிகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News