கல்யாணத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனிற்கு நயன்தாரா அளித்த பரிசு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2022, 01:07 PM IST
  • ஜூன் 9ம் தேதி சென்னையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
  • முக்கிய நட்சத்திரங்கள் மட்டும் திருமணத்தில் பங்கேற்றனர்.
  • கோடிக்கணக்கில் பரிசுகளை பரிமாறிய நயன்-விக்கி ஜோடி.
கல்யாணத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனிற்கு நயன்தாரா அளித்த பரிசு! title=

கடந்த 2015ல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் ஆகியோர் இடையே மலர்ந்த காதல் தற்போது புனிதமான திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.  சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் முக்கியமான பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.  இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு, கார்த்தி, கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார், மணிரத்னம், பொன்வண்ணன், ஷாருக்கான், ராதிகா சரத்குமார்,  போனி கபூர், அட்லீ, அனிரூத் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | லோகேஷ் - சூர்யா கூட்டணியில் உருவாகும் 'இரும்பு கை மாயாவி' - தயாரிப்பாளர் உறுதி!

இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் பலரும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் அந்த புகைப்படங்களை பதிவேற்றி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.  தற்போது நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கு பரிசாக விலையுயர்ந்த பொருளை கொடுத்து அசத்தியிருக்கிறார்.  20 கோடி ருபாய் மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவை விக்னேஷ் சிவனின் பெயரில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.  இதுதவிர நயன்தாரா அவரது நெருங்கிய உறவினரான ஐஸ்வர்யா என்பவருக்கு 30 சவரன் நகைகள் மற்றும் சில ஆடம்பர பொருட்களையும் சேர்த்து வழங்கியிருக்கிறார்.

நயன்தாரா மட்டும் விக்னேஷ் சிவனை பரிசு கொடுத்து அசுத்தவில்லை, விக்னேஷ் சிவனும் நயன்தாராவிற்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.  திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்த நகைகளை விக்னேஷ் சிவன் தான் பரிசாக கொடுத்துள்ளார், அதன் மதிப்பு சுமார் 2.5 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் அதோடு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வைர மோதிரத்தையும் தனது காதல் மனைவிக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | திருப்பதி கோவில் சர்ச்சை! மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News