நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளார். 

Last Updated : Mar 22, 2020, 03:47 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை title=

நடிகர் ராகவா லாரன்ஸ்  இயக்கிய காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. இவர் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

மலையாளத்தில் வெளியாகி  வெற்றி பெற்ற, ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை சமீபத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றினார். ஆகையால் அந்த படத்தின் ரீமேக்கில் தான் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News