காவி உடையில் வாழும் வள்ளுவராக ரஜினி... யார் பார்த்த வேலை தெரியுமா?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு  மதுரை மாநகரில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள வித்தியாசமான போஸ்டர் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 12, 2022, 09:52 AM IST
  • ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
  • கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து.
  • ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
காவி உடையில் வாழும் வள்ளுவராக ரஜினி... யார் பார்த்த வேலை தெரியுமா? title=

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாபா மறு வெளியீடு, ஜெயிலர் படத்தின் அப்டேட் என ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். 

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்,"என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!. நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என பதிவிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, ரஜினி பல்லாண்டு கால நண்பரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்,"அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் திடீர் மாற்றம்?

அந்த வகையில், ரஜினி ரசிகர்கள் பல்வேறு வழிமுறைகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், பிறந்தநாள் கொண்டாடியும் வருகின்றனர். அதில், முக்கியமாக மதுரை ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், 'வாழும் வள்ளுவரே' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்தவாறு, "அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர்" என்று புதுகுரல் எழுதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ரஜினி வள்ளுவர் வடிவில் இருந்தபோதிலும், காவி நிறத்தில் உடை அணிந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதி நகர தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது போன்ற சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது ரஜினியை வள்ளுவராக்கி அவருக்கு காவி உடையை கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, மதுரை ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர்கள் வைரலாகும் என்றாலும், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மதுரை ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்... அப்செட்டில் ரஜினி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News