ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

Jailr OTT Release Date: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ஓடிடியிலும் இனி பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 2, 2023, 06:36 PM IST
  • ஜெயிலர் படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியானது.
  • இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்.
ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!  title=

தமிழ் திரையுலகின் ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த மாதம் (ஆகஸ்டு) வெளியான படம், ஜெயிலர். இதனை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்தில் பல திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்திருந்தனர். 

ஜோடியாக கம்-பேக் கொடுத்த ரஜினி-நெல்சன்:

கோலமாகவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் நெல்சன் திலீப்குமார். சில படங்களையே இயக்கி இருந்தாலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தவர் இவர். ரஜினிகாந்தை ஹீரோவாக நடிக்க வைத்து இவர் இயக்கியிருந்த படம், ஜெயிலர். இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் ஜெயிலர் படம் மீது பலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ரஜினிகாந்தும் கடந்த 5 ஆண்டுகளில் பெரிதாக மாஸ் ஹிட் கொடுக்காமல் இருந்தார். ஆனால் ஜெயிலர் திரைப்படம் இருவருக்கும் பெரிய கம்-பேக் ஆக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!

ப்ளாக் பஸ்டர் ஹிட்: 

ஜெயிலர் திரைப்படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் சுமார் 240 கோடி பொருட் செலவில் உருவானதாக கூறப்பட்டது. படத்தின் முதல் நாள் வசூலே 60 கோடியை தாண்டியது. படம் வெளியாகி 23 நாட்கள் கடந்து விட்டது. இந்த நிலையில், படத்தின் வசூல் தற்போது 600 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஓடிடியில் வெளியீடு:

ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படம் வெளியான போதே தகவல்கள் வெளியானது. இதையடுத்து அமேசான் ப்ரைம் தளம் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த தளம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 

ஜெயிலர் பட நட்சத்திரங்கள்

ஜெயிலர் படத்தில் பல பிரபல நட்சத்திரங்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தனர். படத்தின் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்திருந்தனர். மேலும், இதில் ரஜினிக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். மனைவியாக ரம்யா கிருஷ்ணன், மருமகளாக மிர்ணா ஆகியோர் நடித்திருந்தனர். 

ரஜினி-நெல்சனுக்கு சொகுசு கார்:

ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் ஆகியோருக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அன்பு பரிசுகளை வழங்கியுள்ளார். முதலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த அவர் விளை உயர்ந்த இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காண்பித்து ஒன்றை தேர்ந்தெடுக்க செய்தார். பின்பு அதையே அவருக்கு பரிசாக வழங்கினார். ஒரு பெரிய தொகையையும் அவருக்கு பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன். இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் ஒரு காரை பரிசாக வழங்கிய அவர், பெரிய தொகை ஒன்றை செக்காக வழங்கியுள்ளார். 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News