ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2023, 09:44 AM IST
  • இனி ஜெயிலர் திரைபப்டம் வீடுகளுக்கே வரும்
  • ஓடிடி வெளியீட்டு தேதி வெளியானது
  • 2 தளங்களில் வெளியாகும் ஜெயிலர்
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம் title=

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையுலகில் ஆட்சி செய்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். பலர் திரையரங்குகளில் திரைப்படத்தை பார்க்காவிட்டாலும், ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது.

ஜெயிலர் OTT வெளியீட்டு தேதி

ஜெயிலர் திரைப்படம், ஓடிடியில் 2 தளங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அவற்றில் ஒன்று நெட்ஃபிக்ஸ், மற்றொரு தளம் எது என்ற தகவல்கள் உறுதியாக தெரியவில்லை. எனவே Jailer OTT பிளாட்ஃபார்ம் பெயர் Netflix  என்று சொல்லலாம். ஜெயிலர் OTT உரிமை விலை எவ்வளவு என்ற கேள்வி எழுகிறதா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் ஆகஸ்ட் 10, 2023 அன்று வெள்ளித்திரையில் வெளியானது. ஜெயிலர். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜெயிலர் திரைப்படம்

கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்களுக்கு கிடைக்காத அமோக வரவேற்பு பெற்று, மிகப் பெரிய சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

2.0, தர்பார் போன்ற படங்களும் எதிர்பார்த்த அளவு விரும்பப்படவில்லை. ‘பேட்ட’ திரைப்படமும், ஜெயிலர் திரைபப்டம் போன்ற வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.  

மேலும் படிக்க | சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

வசூல் சாதனை

ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் தகவல்கள் வெளியானது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 375 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது.

375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்ததாக தெரிவித்த அந்த சமூக ஊடகப் பதிவில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஜெயிலர் 2 OTT இயங்குதளங்களில் வெளியிடப்படும் என்பதும், அதில், நெட்ஃபிளிக்ஸில் வெளியாவது உறுதியானது என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஜெயிலரை, செப்டம்பர் 7, 2023 முதல் வீட்டில் இருந்தபடியே அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

ஜெயிலர் பட நட்சத்திரங்கள்

ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்டோர் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தனர். படத்தின் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

ஜெயிலர் இரண்டாம் பாகம் வதந்தி

ஜெயிலர் படம் வெளியான புதிதில் இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாக ஒரு தகவல் கிளம்பியது. இதில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை யாரும் உறுதி செய்யவில்லை. எனவே, முதல் பாகத்தை ஓடிடியில் பார்த்து ரசியுங்கள்.

மேலும் படிக்க | ‘கிங் ஆஃப் கோதா’ படம் எப்படியிருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News