லால் சலாம் Vs. லவ்வர்: எந்த படத்தை முதலில் பார்ப்பது? ரசிகர்களின் கருத்து இதுதான்!

Lal Salaam Vs Lover Tamil Movies: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ‘லால் சலாம்’ திரைப்படமும், மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘லவ்வர்’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எதை முதலில் பார்ப்பது?   

Written by - Yuvashree | Last Updated : Feb 10, 2024, 01:21 PM IST
  • லவ்வர் மற்றும் லால் சலாம் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.
  • இரு படங்களுக்குமே நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது.
  • எந்த படத்தை முதலில் பார்ப்பது?
லால் சலாம் Vs. லவ்வர்: எந்த படத்தை முதலில் பார்ப்பது? ரசிகர்களின் கருத்து இதுதான்! title=

Rajinikanth Lal Salaam Vs Manikandan Lover Which One Got Good Reviews: ஒரே நாளில் பல படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவில் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படமும், வளர்ந்து வரும் ஹீரோ மணிகண்டனின் படமும் நேற்று (பிப்ரவரி 9) ஒரே நாளில் வெளியானது. ரசிகர்கள் பலர், நல்ல கதையாக இல்லா விட்டாலும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு செல்வது வழக்கம். அதனுடன் வெளியாகியிருக்கும் சிறிய பட்ஜெட் படங்கள் பெரிதாக தெரியாமலேயே போய் விடும். ஆனால், இப்போது மக்களின் ரசனைகள் மாறியுள்ளது. 

லால் சலாம் விமர்சனம்:

லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். மதத்தையும் கிரிக்கெட்டையும் வைத்து இயக்கப்பட்டுள்ள கதை இது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு 40 நிமிடங்களுக்கு ஸ்கிரின் டைம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள், கேமியோ ரோலைத்தாண்டி, படத்தின் லீட் நடிகர் போலவே ரஜினி நடித்திருப்பதாக கூறுகின்றனர். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’. இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் இண்ட்ராேவிற்கு பிறகு சூடு பிடிப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். மதம் தொடர்பான கருத்துகள் ஆழ பதியும் வகையில் இருப்பதாகவும், படத்தின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளால் படம் நன்றாக மனதில் பதிய தவறுவதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துகளை கூறுகின்றனர். 

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இந்த விஷயத்தை பண்ண மாட்டேன் - ஜீவி பிரகாஷ்

லவ்வர் விமர்சனம்:

இன்றைய இளம் தலைமுறையினர் சிக்கித்தவிக்கும் டாக்ஸிக் காதல் குறித்து பேசியிருக்கும் படம், லவ்வர். இந்த படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக, ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருக்கிறார். இப்படத்தை, பிரபு ராம் வியாஸ் இயக்கியிருக்கிறார். இப்படம் இவருக்கு முதல் படமாகும். லவ்வர் படத்தில், காதலின் கருப்பு பக்கங்களை காண்பித்துள்ளனர். இன்றைய தலைமுறையினர், காதலில் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதையும் காட்டியுள்ளனர். படம், பெரிய புரிதலுடன் இருப்பவர்களை ஈர்த்துள்ளது. மேலும், மணிகண்டன் மற்றும் கெளரி பிரியாவின் நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. 

எந்த படத்தை முதலில் பார்ப்பது? 

லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு படங்களுமே நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். லால் சலாம் கமர்ஷியல் படமாக நன்றாக இருப்பதாகவும், இதுவரை பார்த்திராத ரஜினியை இந்த படத்தில் பார்க்க முடிவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், முதலில் லால் சலாம் படத்தை பார்த்தால் நன்றாக இருக்கும் என இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கபட்டுள்ளதால், படத்தின் அவுட்புட்டும் நன்றாக வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லவ்வர் திரைப்படம், நல்ல கதையுடன் இருந்தாலும் இதனை பெரும்பாலான வெகுஜென மக்களால் புரிந்து கொள்ள முடியாது என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த படத்தையும் தவறாமல் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கருத்துகள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Lover Review: டாக்ஸிக் காதலுக்கு எடுத்துக்காட்டு.. “லவ்வர்” படம் எப்படியிருக்கு? திரை விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News