ஒரே நேரத்தில் இத்தனை படங்களா? அடுத்தடுத்து வெளியாகியுள்ள ரஜினி பட அப்டேட்கள்!

ரஜினி ஜெயிலர் படத்தை முடிந்த பிறகு இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2023, 02:12 PM IST
  • இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஜெயிலர்.
  • லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார்.
  • அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஒரே நேரத்தில் இத்தனை படங்களா? அடுத்தடுத்து வெளியாகியுள்ள ரஜினி பட அப்டேட்கள்! title=

தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 72வது வயதில் தனது படங்களுக்கு விறுவிறுப்பாகப் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ரஜினி நடிப்பில் அடுத்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 169வது படமான 'ஜெயிலர்' படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்திய தகவல்களின்படி, ரஜினிகாந்த் தனது இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?

ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, மேலும் அவரது 170வது படத்தை 'ஜெய் பீம்' புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களையும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ரஜினி ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்கவுன்டர் தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஓய்வுபெற்ற இஸ்லாமிய காவலராக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. மறுபுறம், அவர் சென்னை மற்றும் மும்பையில் 'லால் சலாம்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் இந்தப் படங்களுக்கான படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஒரு மெகா ஆக்‌ஷன் படத்தில் இணையவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.  லோகேஷ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க | எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News