ஏப்ரல் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தின் மொத்த பட்டியல்

Tomorrow Streaming OTT Movies: நாளை ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி, இங்கிலீஷ் திரைப்படம் குறித்து பட்டியலைக் காண்போம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2023, 02:33 PM IST
  • நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா.
  • நல்ல வரவேற்பை பெற்ற அயோத்தி' படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்படும்.
  • உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ரோமாஞ்சம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்
ஏப்ரல் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தின் மொத்த பட்டியல் title=

List of OTT Releases This Week: புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இந்த வார இறுதியில் (ஏப்ரல் 7) ஓடிடி (OTT) தளத்தில் வெளியாக உள்ளன. நாடகம், நகைச்சுவை, அதிரடி, ஆக்சன், எமோசனல் என பல வகைகளில் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இந்த வார ஓடிடி தளத்தில் வெளியாக தயாராக உள்ளன. நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா போன்ற ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியிடப்படும். பார்வையாளர்களை மகிழ்விக்க நாளை எந்த ஓடிடி பிளாட்ஃபார்மில் என்ன படங்கள் வெளியாகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அயோத்தி (Ayothi) 
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அயோத்தி' படம் ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் நாளை (ஏப்ரல் 7) வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க: இந்த படங்கள் எல்லாம் கன்னட மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை!

புர்கா (Burqa)
இயக்குனர் சர்ஜுன் கே.எம்-ன் சமீபத்திய திரைப்படமான 'புர்கா' ஏப்ரல் 7 ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் (Aha Tamil) ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் மிர்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு மற்றும் ஆர் சிவாத்மிகா இசையமைத்துள்ள இந்த திட்டத்தில் சூரியநாராயணன் மற்றும் ஜிஎம் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சுபா (Chupa) 
சுபா திரைப்படம் அலெக்ஸ் என்ற சிறுவனின் சுவாரசியமான கதையாகும். இந்த படத்தை ஜோனாஸ் குரோன் இயக்கியுள்ளார். படத்தைப்பற்றி இயக்குனர் ஜோனாஸ் குரோன் கூறுகயில்கூறுகையில், "சுபா ஒரு அரக்கனாக இருக்கலாம், ஆனால் அலெக்ஸ் என்ன செய்கிறார் என்பதை அவர் மட்டுமே புரிந்துகொள்கிறார். ஒரு பையனுக்கும் உயிரினத்திற்கும் இடையிலான பந்தம் மிகவும் தூய்மையானது அது மொழியைக் கடந்தது எனத் தெரிவித்துள்ளார். இந்த நெட்ஃபிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் நாளை (ஏப்ரல் 7) வெளியாகிறது. 

மேலும் படிக்க: புஷ்பா 2 எப்போது...? அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு சர்ப்பரைஸ் அப்டேட்!

பிரணய விலாசம் (Pranaya Vilasam)
புதிய மலையாள மொழித் திரைப்படமான பிரணயா விலாசம் ஒரு காதல் நகைச்சுவை படமாகும். அனஸ்வர ராஜன், மமிதா பைஜு மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் சுற்றி நடக்கும் கதை. இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது. மலையாள இயக்குனர் மார்ட்டின் பிரக்கத் தயாரித்துள்ள இப்படத்தை நிகில் முரளி இயக்கியுள்ளார். இந்த மலையாளத் திரைப்படம் ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் நாளை (ஏப்ரல் 7) வெளியாகவுள்ளது.

காலி பர்ஸ் பில்லியனர்ஸ் (Khali Purse of Billionaires)
வறுமையின் படுகுழியில் இருந்து பில் கேட்ஸாக இருக்க முயற்சிக்கும் மக்களைப் பற்றியது கதை தான் காலி பர்ஸ் பில்லியனர்ஸ். படம் இரண்டு இளைஞர்கள், எந்த நிதி ஆதரவும் இல்லாத, ஒரு பெரிய கனவைத் தொடர்வதைப் பற்றியது. இது வறுமையின் படுகுழியில் இருந்து பில் கேட்ஸாக மாற முயற்சிக்கும் இரண்டு இளைஞர்கள் பற்றியது. கொச்சியில் உள்ள வீடுகளில் இருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் படத்தின் பின்னணி. இந்த படம் நாளை சன் நெக்ஸ்ட் (SunNXT) ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது. 

மேலும் படிக்க: ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?

மகேஷும் மாருதியு (Maheshum Marutiyum)
மிஸ் ஆசிப் அலியின் நாயகனாக நடித்துள்ள சமீபத்திய மலையாள படம் தான் மகேஷும் மாருதியு. மகேசும் மாருதியும் படத்தில் மம்தா மோகன்தாசிஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், 1984 மாடல் மாருதி 800 கார் இப்படத்தின் மையக் கதாபாத்திரம். மணியன்பிள்ளை ராஜு புரொடக்ஷன்ஸ் மற்றும் விஎஸ்எல் பிலிம் ஹவுஸ் நிறுவனத்தின் கீழ் மணியன்பிள்ளை ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார். எழுத்தாளர்-இயக்குனர் சேது இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) வெளியாகவுள்ளது.

ரோமாஞ்சம் (Romancham) 
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு 'ரோமாஞ்சம்' ஓவர்-தி-டாப் (OTT) தளத்தில் நாளை வெளியாக தயாராக உள்ளது. இந்த திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும். 

மேலும் படிக்க: ரஜினியின் தர்பார் படம் தோல்வியடைந்தது ஏன்? ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News