Rajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

சிறப்பு அனுமதியுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 12:19 PM IST
Rajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி title=

கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவுள்ள நிலையில் அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா (Corona Spread) அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். 

ALSO READ | கொரோனா நிவாரண நிதி: நடிகர் ரஜினிகாந்த் ரு.50 லட்சம் வழங்கினார்

இந்நிலையில் இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்கின்றனர். ரஜினி வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் ஏற்ற நிலையில் அவருக்கு அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த (Annaatthe) திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. வருகிற தீபாவளி பண்டிகையன்று அண்ணாத்த படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News